இலங்கை: கலக்கத்தில் சந்திரிகா
கொழும்பு:
மக்கள் கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் தன்னைவிட்டு ஓடிக் கொண்டிருப்பதைப் பார்த்து கதி கலங்கிப் போய்இருக்கிறார் சந்திரிகா குமாரதுங்கா.
கடந்த மாதம் வரை மக்கள் கூட்டணியோடு கைகோர்த்துக் கொண்டிருந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, வெடுக்கெனதன் கையைப் பிடுங்கிக் கொண்டு போய்விட்டது. காரணம் இல்லாமல் இல்லை.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரு அமைச்சர் பதவியைக் கொடுத்திருந்தார் சந்திரிகா. ஆனால், தாங்கள் கூறும்எந்தப் பிரச்சனைகளையும் அதிபர் கவனிக்கவில்லை என்று அந்த அமைச்சர் கூறி வந்தார். இதையடுத்து, அந்தஅமைச்சரைப் பதவியில் இருந்து தூக்கி வீசினார் சந்திரிகா.
பிரச்சினை ஆரம்பமானது. ஆளும் மக்கள் முன்னணிக்குக் கொடுத்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது முஸ்லிம்காங்கிரஸ் கட்சி. இதையடுத்து, ஆளும் கூட்டணிக் கட்சிகளின் எண்ணிக்கையில் 11 குறைந்துவிட்டது. 109இடங்களை மட்டுமே வைத்துக் கொண்டு, சந்திரிகா போராடிக் கொண்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து, சந்திரிகா அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரும் வேலையில், எதிர்க்கட்சிகள் அனைத்தும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இதோ அதோ என்று இலங்கை நாடாளுமன்றக் கூட்டத்தைக்கூட்டுவதை, சந்திரிகா தள்ளி வைத்துக் கொண்டே இருந்தார். இதன் மீதான விவாதம் இந்த மாத இறுதிக்குள்நடைபெறும் என்று தெரிகிறது.
இந் நிலையில், தற்போதுள்ள மக்கள் கூட்டணியில் இருந்தும் சில கட்சிகள் பிய்த்துக் கொண்டு ஓடிவிடுமோ என்றஅச்சம் சந்திரிகாவுக்கு எழுந்துள்ளது. உள்ளதும் போய்விட்டால், அரசியல் எதிர்காலமே கேள்விக் குறியாகிவிடுமே என்ற பயத்தில் உள்ளார் சந்திரிகா.
இருந்தாலும், பெருத்த நம்பிக்கையுடன் போராடி வருகிறார் அதிபர். "யார் வேண்டுமானாலும், எத்தனை பேர்வேண்டுமானாலும் என்னைக் கடந்து போங்கள். ஆனாலும் நான்தான் அதிபராகத் தொடர்ந்து நீடிப்பேன்" என்றுதன்னம்பிக்கையுடன் கூறியுள்ளார் சந்திரிகா குமாரதுங்கா.
ஐ.ஏ.என்.எஸ்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications