கன்னியாகுமரி 133 அடி திருவள்ளுவர் சிலையில் ஊழலா?
நாகர்கோவில்:
சென்னையில் 10 மேம்பாலங்கள் கட்டியதில் திமுக ஊழல் செய்தது என புகார் பதிவு செய்து அவசர அவரசமாய்தமிழக அரசும் போலீசாரும் கருணாநிதி, ஸ்டாலின் மீது நள்ளிரவில் நடவடிக்கை எடுக்க அந்த வழக்கே அரசுக்குஎதிராகத் திரும்பிவிட்டது.
இந் நிலையில் கன்னியாகுமரியில் அமைக்கப்பட்டுள்ள 133 அடி திருவள்ளுவர் சிலையை கையில் எடுத்துள்ளார்ஜெயலலிதா. இந்த சிலை அமைத்ததிலும் திமுக ஊழல் புரிந்துள்ளது என்று தமிழக அமைச்சர் தளவாய் சுந்தரம்கூறியுள்ளார்.
திங்கள்கிழமை அவர் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
கன்னியாகுமரியில் நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலையின் கட்டுமானப் பணியில் ஏகப்பட்டஊழல்களைப் புரிந்துள்ளது முந்தைய திமுக அரசு.
இந்தத் திருவள்ளுவர் சிலை கட்டுமானப் பணிக்கு ரூ.6.14 கோடி செலவானது என திமுக அரசு கூறியுள்ளது.ஆனால், கட்டுமானப் பணிகள் இன்னும் முழுமையடையவில்லை.
இந்நிலையில், கட்டுமானப் பணியை இன்னும் முடிக்காத காரணத்திற்காகப் போராடப் போவதாக திமுகவில்சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்த சுரேஷ் ராஜன் கூறியுள்ளார். இதுதான் வேடிக்கையாக இருக்கிறது.
திருவள்ளுவர் சிலை கட்டுமானப் பணிக்கு ஆன செலவில் ஏராளமான ஊழல் நடந்துள்ளது. இதற்கான விசாரணைநடந்து வருகிறது. இதன் கட்டுமானப் பொறியாளர் ஆனந்த குமாரை தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.
அப்போது முதல்வராக இருந்த கருணாநிதிக்கும், சுரேஷ் ராஜனுக்கும் இந்த ஊழலில் பெரும் பங்கு இருக்கிறது.விரைவில் அனைத்தும் வெளியில் வரும் என்றார் தளவாய் சுந்தரம்.
சிலை அமைக்க எவ்வளவு செலவானது என்பது குறித்து 2 சிற்பிகளை வைத்து தமிழக அரசு ஆராய்ந்து வருகிறது.இந்த சிலையை உலகப் புகழ் வாய்ந்த கணபதி ஸ்தபதி தான் செய்தார். இப்போது அரசு சார்பில் சிலையைஆராய்ந்து வரும் 2 சிற்பிகளும் அவரது சிஷ்யர்கள் தான் எனவும் கூறப்படுகிறது.
கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறைக்கு அருகே உள்ள பாறையின் மீது தான் இந்த திருவள்ளுவர் சிலைஅமைக்கப்பட்டது. திருக்குறளை வைத்து குறளோவியம் எழுதியவர் கருணாநிதி. பின்னர் சென்னையில் வள்ளுவர்கோட்டம் அமைத்தார். அதன் சுவர்களில் எல்லாம் திருக்குறளை செதுக்க வைத்தவர் கருணாநிதி என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications