சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் கலாட்டா: அவையை ஒத்தி வைத்தார் ஸ்டாலின்
சென்னை:
புதன்கிழமை கூடிய சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் பெரும் கூச்சல், ரகளை ஏற்பட்டதை அடுத்து, கூட்டத்தைஅவசர அவசரமாக ஒத்தி வைத்தார் மேயர் மு.க. ஸ்டாலின்.
வரும் உள்ளாட்சித் தேர்தலையொட்டி, வாக்காளர் பட்டியலைச் சரிபார்ப்பதற்காகவும், வாக்குச் சாவடிகள் பற்றியவிவரங்களைத் தெரிந்து கொள்வதற்காகவும் சென்னை மாநகராட்சிக் கூட்டம் புதன்கிழமை அவசரமாகக் கூடுகிறதுஎன்று மாநகராட்சி கமிஷனர் ஆச்சார்யலு திங்கள்கிழமை அறிவித்திருந்தார்.
அப்போது, 115 வாக்குச் சாவடிகள் பற்றி இன்னும் தகவல்கள் சேகரிக்க வேண்டியிருப்பதால், இதற்காக மேலும் 15நாட்கள் அவகாசம் வேண்டும் என்று சில உறுப்பினர்கள் கூறினார்கள். இதையடுத்து, தமாகா உறுப்பினர் ஒருவர்கோபாவேசமாகப் பேசியவாறு, சில பேப்பர்களைத் தூக்கி வீசினார். இதனால் சலசலப்புடன் தகராறு ஏற்பட்டது.
அப்போது, மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் வெற்றிவேல் அங்கு வந்ததையடுத்து, தகராறு மேலும்முற்றியது. திமுக உறுப்பினர்களும் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் காராசாரமாகப் பேசிக் கொண்டதையடுத்து,பிரச்சினை மேலும் தீவிரமாகியது.
இதையடுத்து, மேயர் ஸ்டாலின் கூட்டத்தை ஒத்தி வைத்தார். "தகராறு வலுத்துக் கொண்டே போனதால், வேறுஎதுவும் அசம்பாவிதம் நடந்து விடும் என்பதற்காகத்தான் கூட்டத்தை ஒத்தி வைத்தேன்" என்று அவர்விளக்கமளித்தார்.
ஆனால், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களான கராத்தே தியாகராஜனும் வெற்றிவேலும் கூறுகையில், "உள்ளாட்சித்தேர்தலில், தாங்கள் எப்படியும் தோற்று விடுவோம் என்ற பயத்தினால்தான், ஸ்டாலின் கூட்டத்தை ஒத்தி வைத்துவிட்டார்" என்று நிருபர்களிடம் கூறினார்கள்.
மாநகராட்சிக் கூட்டத்தில் தகராறு ஏற்பட்டதையடுத்து, மாநகராட்சிக் கட்டடம் முழுவதும் பலத்த பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
அவசரமாகக் கூட்டப்பட்ட இந்த மாநகராட்சிக் கூட்டத்தைப் பற்றிய அறிவுப்பு, முன்னரே தனக்குத்தெரிவிக்கப்படவில்லை என்று மேயர் ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை கூறியது குறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications