தமிழகத்தில் முதல் பெண் கால்பந்து கோச் நியமனம்
சென்னை:
தமிழகத்தில் முதல் பெண் கால்பந்து பயிற்சாளரை நியமித்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னை வடபழனியைச் சேர்ந்த நோயலின் ஜான் என்ற பெண்தான் தமிழகத்தின் முதல் பெண் கால்பந்துபயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமன உத்தரவை சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில், ஜெயலலிதாவிடமிருந்து நோயலின்செவ்வாய்க்கிழமை பெற்றுக் கொண்டார்.
தென்மண்டல மற்றும் தேசிய அளவிலான கால்பந்துப் போட்டிகளில் 6 முறை விளையாடியுள்ளார் நோயலின்.
இவர் விளையாட்டுப் பயிற்றுநராக என்.ஐ.எஸ். பயிற்சியும் பெற்றுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள், ஜெயலலிதாவிடம் கோரிக்கை மனுக்களைக்கொடுத்து வருகிறார்கள். அந்த வகையில் நோயலின் ஜானும், தனக்கு கால்பந்து பயிற்றுநர் பணியை அளிக்கவேண்டும் என்று முதல்வரிடம் கோரியிருந்தார்.
இதையடுத்தே, நோயலினுக்கு இப்பணியை வழங்கியுள்ளார் ஜெயலலிதா.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கான கால்பந்து பயிற்சியாளராகப்பணியமர்த்தப் பட்டுள்ளார் நோயலின். ரூ.5,300-150-8,300 என்ற விகிதத்தில் அவருக்குச் சம்பளம்வழங்கப்படும.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications