மெகா குழப்பத்தில் தமாகா!
சென்னை:
ராஜ்யசபா தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இன்னும் எந்தமுடிவையும் தீர்மானமாக எடுக்கவில்லை.
மெளனமாக உள்ளது என்பதை விட குழப்பமாக உள்ளது என்பதே சரியான வார்த்தையாகும். தமாகா தலைவர்மூப்பானரின் மகன் கோவிந்தவாசன் சமீப காலமாக கட்சிக்குள் சிலரால் முக்கியத்துவம் தரப்பட்டு வருகிறார்.இதற்கு மூப்பனாரின் ஆசி உள்ளதா என்பது உறுதியாக தெரியாத நிலையில், எம்.பி. தேர்தலிலும்கோவிந்தவாசனே நிற்க வேண்டும் என்று சில தலைவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
கோவிந்தவாசனுக்கு ஆதரவாக அவர்கள் கோரிக்கை எழுப்பி வருகிறார்கள். வியாழக்கிழமை நடந்த தமாகாஎம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், கோவிந்தவாசன்தான் தேர்தலில் நிறுத்தப்பட வேண்டும் என்று கோரி, 21எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். தமாகாவக்கு மொத்தம் 22 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
தற்போது எம்.பியாக உள்ள ஜெயந்தி நடராஜனுக்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சரும், முக்கியபிரமுகருமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் குரல் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது. வியாழக்கிழமை நடந்தஎம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை.
தமாகா எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் கோவிந்தவாசனை நிறுத்த வேண்டும் என்ற ஒரு வரித் தீர்மானம்நிறைவேற்றப்பட்டதும் அந்த முடிவை எம்.எல்.ஏக்கள் மூப்பனார் வீட்டிற்குச் சென்று தெரிவித்தனர். அதை அவர்மெளனமாக கேட்டுக் கொண்டார்.
இதற்கிடையே மூப்பனார் முன் சில குழப்பங்கள் விடை காணப்படாமல் உள்ளன.
தான் எம்.பியாக இருப்பதால், மகனையும் எம்.பியாக்கினால் பிறர் கேலி செய்ய மாட்டார்களா? தனது மகனைஎம்.பியாக்கி விட்டால், பிறகு மற்ற கட்சிகளைப் பார்த்து வாரிசு அரசியல் என்று குறை கூற முடியாதே என்ற பலகேள்விகள் அவர் முன் உள்ளன.
இந்த நிலையில் கோவிந்தவாசன் ஒருவேளை எம்.பி. தேர்தலில் நிற்காவிட்டால் அவருக்குப் பதில் கட்சியின்செய்தித் தொடர்பாளர் ஞானதேசிகன் அல்லது துணைத் தலைவர் அப்துல் காதர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புஅளிக்கப்படலாம் என்று தெரிகிறது. நிச்சயம் ஜெயந்திக்கு வாய்ப்பு இருக்காது என்றே கட்சிக்குள் பேச்சுஅடிபடுகிறது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications