ஜெ. ம-னு-வைத் தள்-ளு-படி செய்-த 3வது தேர்-தல் அதி-க-ாரியும் மாற்-றம்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா சட்டசபைத் தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவைத் தள்ளுபடி செய்த புவனகிரிதொகுதி தேர்தல் அதிகாரி சந்தானம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.சட்டசபைத் தேர்தலின்போது ஜெயலலிதா 4 தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.புதுக்கோட்டை, புவனகிரி, ஆண்டிப்பட்டி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல்செய்தார்.ஆனால், ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை பெற்ற காரணத்தினால் அவரது 4 மனுக்களும் நிராகரிக்கப்பட்டன.இந் நிலையில் தேர்தலில் ஜெயலலிதா போட்டியிடாமலேயே அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப்பிடித்தது. இதையடுத்து ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி அமைந்தது.ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் அவரது வேட்பு மனுக்களைத் தள்ளுபடி செய்த தேர்தல் அதிகாரிகள் பழிவாங்கப்படுவார்கள் என்று கருதப்பட்டது.அதன்படியே இதுவரை 2 தேர்தல் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வேலைஏதும் தரப்படாமல் வைக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டை மற்றும் ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரிகள் பணியிடம்குறிப்பிடப்படாமல் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இருவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந் நிலையில் புவனகிரி தேர்தல் அதிகாரி சந்தானம்இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் எந்தப் பணியிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்படவில்லை.தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது சந்தானம் கடலூர் மாவட்ட வழங்கல் அதிகாரியாக இருந்து வந்தார்.தற்போது மிஞ்சியிருப்பது கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மட்டும் தான்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications