விமானக் கடத்தல்காரர்கள்...தாவூத் இப்ராகிமை ஒப்படைக்க சொல்கிறது இந்தியா
டெல்லி:
மும்பையில் தொடர் குண்டு வெடிப்புகளை நடத்திய கடத்தல் கும்பல் தலைவனான தாவூத் இப்ராகிமைஇந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் அதிபர் முஷாரபிடம் உள்துறை அமைச்சர் கோரிக்கைவிடுத்தார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் முஷாரபை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார் அத்வானி. அப்போதுஅவரிடம் பல கோரிக்கைகளை வைத்தார்.
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள் இந்தியாவில் நடத்தி வரும் தாக்குதல்கள் குறித்து விளக்கிய அத்வானி,தீவிரவாதத்துக்கு கொடுத்து வரும் ஆதரவை பாகிஸ்தான் விலக்கிக் கொள்ள வேண்டும் என்றார்.
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளால் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் நேபாளத்திலிருந்துகடத்தப்பட்டது தொடர்பாக விளக்கிய அத்வானி, கடத்தல்காரக்களை இந்தியாவிடம் பாகிஸ்தான் ஒப்படைக்கவேண்டும் என்றார்.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!