கவர்ச்சில தவெகவுக்கு ஓட்டு போட்டாங்களாம்! என்னா கவர்ச்சி! நான் என்ன..! சரி விடுங்க.. விஜய் கிண்டல்
திருச்சி: என்னாது கவர்ச்சில எனக்கு ஓட்டு போட்டுட்டாங்களாம், கவர்ச்சியா என்னா கவர்ச்சி, நான் என்ன? சரி விடுங்க என ஏதோ சொல்ல வந்து விஜய் அதை நிறுத்திவிட்டார். அப்போது அங்கிருந்த தொண்டர்கள் விசில் அடித்து ஆரவாரம் செய்தார்கள்.
திருச்சி கிழக்கில் வாக்காளர்களுக்கு நன்றி சொல்லும் கூட்டத்தில், முதல்வர் விஜய் பேசுகையில், திருச்சி கிழக்கு மக்களுக்கு ஸ்பெஷல் நன்றி. திருச்சி தமிழகத்தின் இதயம் இந்த திருச்சி கிழக்கு தொகுதி மக்களும் என் இதயத்திற்கு நெருக்கமானவர்கள்.

தவெக ஆட்சிக்கு வந்த பிறகு 6 மாதம் அமைதியாக இருப்போம் என்றவர்கள் 6 நாட்கள் கூட சும்மா இருக்கவில்லை. நான் பதவியேற்ற நாளில் இருந்து அரை மணி நேரம் கூட சும்மா இல்லாமல் புலம்புகிறார்கள். அதுவும் கல்யாண வீட்டுக்கெல்லாம் போய் புலம்புறாங்க!
திருச்சி கிழக்கு, பெரம்பூர் தொகுதியில் மக்கள் என்னை வெற்றி பெற வைத்துவிட்டீர்கள். ஆனால் தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி ஒன்றை ராஜினாமா செய்ய வேண்டும். இந்த தேர்தலில் 1977 இல் எம்ஜிஆர் பெற்ற வாக்கு சதவீதங்களை விட அதிகமாக நாம் பெற்றதாக சிலர் சொல்கிறார்கள். எம்ஜிஆரோடு என்னை நான் ஒப்பிடவில்லை. எம்ஜிஆர் எம்ஜிஆர்தான், ஆநால் நாம் பெரியார், அண்ணா, எம்ஜிஆர் வழியில் உழைக்கிறோம்.
உங்களை ஏமாற்றிய திமுக, அதிமுகவை புறம்தள்ளிவிட்டு இந்த விஜய்யை முதல் சேவகனாக்கி இருக்கிறீர்கள். எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அத்தனை இயக்கங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் கொஞ்சம் அதிகமாக ஆதரிச்சி இருந்தீங்கன்னா நல்லா இருந்திருக்கும்.
தவெக- திமுக இடையேதான் போட்டி. எனக்கும் ஸ்டாலின் சாருக்கும்தான் போட்டி, நம்ம ஏளனமாக பேசுறதா நினைத்து நமக்கு நன்மை செய்றாங்க! ஜென்சி தலைமுறையை கவர ஆங்கிலம்- தமிழ் கலந்து அறிக்கை வெளியிடும் காமெடி பற்றி நான் சொல்லலை.
ரிலீஸ் போட்ட கூட்டம் இப்போது நியூஸ் பார்த்துக்கிட்டு இருக்கிறாங்க! இப்படிப்பட்ட மக்களை தற்குறி தற்குறின்னு சொல்லிக்கிட்டு இருக்காங்க. நான் காஞ்சிபுரம் கூட்டத்தில் சொன்னதைதான் சொல்கிறேன்.
தற்குறி தற்குறினு சொன்னவங்களோடு அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என சொன்னேன். இன்னமும் அதே வார்த்தையை சொல்றீங்க! ஓட்டு போட்ட மக்களை தற்குறினு சொல்றீங்க. அரசியல் புரிதல் இல்லாமல் ஓட்டு போட்டுவிட்டார்கள் என்கிறார்கள்.
அப்பறம் கவர்ச்சில மயங்கி ஓட்டு போட்டுட்டாங்களாம்... நான் என்ன?.. சரி விடுங்க.. தற்குறியாம் தற்குறி நல்லா வாய்ல வருது.. என விஜய், திமுகவை விமர்சித்திருந்தார். மேலும் 200 யூனிட் இலவச மின்சாரம் கொடுத்தோம். அதுல ஏற்கெனவே 100 யூனிட் மின்சாரம் திமுக கொடுத்தது இல்லை, மேடம் ஜெயலலிதா கொடுத்துவிட்டு போனது. நீங்கள் டாஸ்மாக்கில் கொள்ளை அடிச்சிட்டு இருந்தீங்க அந்த ஃபைல்ஸை குளோஸ் செய்ய நெனச்சீங்க, நான் டாஸ்மாக்கையே குளோஸ் செய்துவிட்டேன் என விஜய் விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications