ம-து-ரை-யில் அதிமு--க தொண்-டர் ஓட ஓட விரட்-டிக் கொ-லை-
சென்னை:
மதுரையில் அதிமுக தொண்டர் பட்டப்பகலில் சாலையில் ஓட ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.
சில ஆண்டுகளுக்கு முன் மதுரை மாநகராட்சி கம்யூனிஸ்ட் கவுன்சிலர் லீலாவதி படுகொலை செய்யப்பட்ட அதேவில்லாபுரம் பகுதியில்தான் இந்தப் படுகொலையும் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வில்லாபுரம் சோலைப் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் மாரி. அதிமுகவைச் சேர்ந்தவர். அப்பகுதியில் பன்றிகளைவளர்த்து விற்பனை செய்து வந்தார். அவருக்கும், வில்லாபுரத்தைச் சேர்ந்த சிலருக்கும் இடையே தகராறு இருந்துவந்ததாகத் தெரிகிறது.
சனிக்கிழமை மதியம் மாரி அவரது தாயார் முனியம்மாள், சகோதரர்கள் கோபி மற்றும் சதுரகிரி ஆகியோர்பன்றிகளை விற்க வீட்டிலிருந்து கிளம்பிச் சென்றனர். காளியம்மன் கோவில் குரங்குத்தோப்பு என்ற இடத்தில்வருகையில், ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது.
அவர்களது கையில் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்தன. அக்கும்பல் மாரியை வெட்டமுயன்றனர். அப்போது முனியம்மாளும், அவரது பிற மகன்களும் அவர்களைத் தடுக்க முயன்றனர்.அப்போது அவர்களுக்கு சரமாரியாக அரிவாள் வெட்டு விழுந்தது.
அக்கும்பலிடமிருந்து தப்பித்து ஓடிய மாரியை கும்பல் விரட்டிச் சென்றது. வில்லாபுரம் நூலகம் அருகேயுள்ளஅம்பலக்காரர் தெரு வரை விரட்டிச் சென்ற அக்கும்பலின் பிடியில் மாரி சிக்கிக் கொண்டார். பின்னர் மாரியைஅக்கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டித் தள்ளினர். இதில் மாரி அங்கேயே இறந்தார்.
காயமடைந்த முனியம்மாள், கோபி, சதுரகிரி ஆகியோர் அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
தகவல் அறிந்த அவனியாபுரம் போலீஸார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மாரியை வெட்டிக்கொன்று தப்பிய கும்பலை போலீஸார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications