ராஜ்யசபைக்கு சரத்குமார் உள்பட 6 பேர் போட்டியின்றி தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் நாட்டிலிருந்து மேல் சபைக்கு 6 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் 4 பேர் அதிமுகவையும்,ஒருவர் திமுக வையும் மற்றொருவர்தமாகா வையும் சேர்ந்தவர்கள்.

தமிழ் நாட்டிலிருந்து 6 பேரை மேல் சபைக்குத் தேர்ந்து எடுப்பதற்கான வேட்புமனுதாக்கல் செய்யக் கடைசி நாள் சென்ற 13 ம் தேதி ஆகும்.

கடைசி நாள் 3 மணி வரை 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அவற்றில், அதிமுக சார்பில் பி.ஜி. நாராயணன், நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், காமராஜ்,கோகுல இந்திரா ஆகிய 4 பேர் முதலாவதாக வேட்பு மனுதாக்கல் செய்து விட்டனர்.

அடுத்து, நடிகர் சரத்குமார், திமுக சார்பில் வேட்பு மனுதாக்கல் செய்தார்.

தனது கூட்டணியில் உள்ள த.மா.காவுக்கு அதிமுக ஒரு சீட் ஒதுக்கியது. ஆனால்,

தமாகா தனது வழக்கமான பாணியில் யோசித்து... யோசித்து, வேட்பு மனுதாக்கல்செய்ய கடைசிநாளான நேற்று தனது வேட்பாளராக, அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் ஞானதேசிகனை அறிவித்தது.

முன்னதாக அக்கட்சியில்,மூப்பனார் மகன் கோவிந்தவாசனைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று பலர் விரும்பினர்.

ஆனால் கடைசியில் கட்சித்தலைவர் மூப்பனாரின் முடிவை ஏற்றுக்கொண்டதாகமுன்னாள் மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன், மற்றும் பல தமாகா எம்எல்ஏக்கள்தெரிவித்தனர்.

இவர்கள் தவிர மேட்டூரைச்சேர்ந்த பத்மராஜன் என்பவரும் மனுதாக்கல் செய்துள்ளார்.

ஒவ்வொரு வேட்பாளர் பெயரையும் 10 எம்எல்ஏக்கள் சிபாரிசு செய்யவேண்டும்மேலும் 5 ஆயிரம் ரூபாய் டெபாசிட் கட்டவேண்டும்.

ஆனால், பத்மராஜன் பெயரை எம்எல்ஏக்கள் யாரும் சிபாரிசும் செய்யவில்லை,அவர்டெபாசிட்டும் கட்டவில்லை.

எனவே,அவர் மனு தள்ளுபடி செய்யப்படலாம். மேலும், 16ம் தேதி மாலை 3 மணிவரை வேட்பு மனுக்களை திரும்பப்பெறலாம்.

இதன் மூலம், அந்த 6 பேரும் 16ம் தேதி 3 மணிக்குப் பிறகு அதிகாரப்பூர்வஎம்.பிக்களாக அறிவிக்கப்படுவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+