தேர்தல் அதிகாரி சாரங்கியை ஜெ. எதிர்ப்பது ஏன்?
சென்னை:
ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கான அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிமிருத்யுஞ்சய் சாரங்கியை அதிமுக தீவிரமாக எதிரித்து வருகிறது.
ஏன் எதிர்க்கிறார்கள் என சாரங்கி உள்பட அனைவருமே குழப்பிப் போயிருந்தனர். இப்போது தான் அதற்கானகாரணம் தெரியவந்துள்ளது.
தமிழகத்திலிருந்து காலியாகும் 6 ராஜ்யசபா காலியிடங்களுக்கான தேர்தல் 23ம் தேதி நடைபெறுவதாக அறிவிப்புவெளியானது. அதைத் தொடர்ந்து தேர்தல் அதிகாரியாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய்சாரங்கி இருப்பார் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.
வழக்கமாக சட்டசபைச் செயலாலர் தான் ராஜ்யசபா எம்.பி. தேர்தலுக்கான தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்படுவதுவழக்கம். ஆனால், இந்த முறை மத்திய தேர்தல் கமிஷன் புதிய முறையைக் கையாண்டதால் முதல்வர்ஜெயலலிதாவுக்குக் கடும் கோபம் வந்தது.
இந்த அறிவிப்பு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அதிமுக மட்டுமல்லாது பல அரசியல்தலைவர்களின் மனதிலும் கேள்விகளை எழுப்பியது.
பின்னணி என்ன?
ஆனால், இதற்கு பின்னணி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமானஜெயலலிதா தற்போது எம்.எல்.ஏவாக இல்லை. 6 மாதத்திற்குள் அவர் எம்.எல்.ஏவாக ஏதாவது ஒரு தொகுதியில்போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் முதல்வராக நீடிக்க முடியும்.
ஆனால் ஊழல் வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை ரத்தாகாத நிலையில் அவரால் தற்போதைக்குதேர்தலில் நிற்க முடியாத சூழ்நிலை உள்ளது.
இதையடுத்து முதல்வராக நீடிக்க வேண்டுமானால் ஜெயலலிதா முன் ஒரே ஒரு வழி மட்டுமே இருந்தது. அதாவதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஏதாவது ஒரு பதவியில் (அதாவது எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.) இருந்தால்,அவரால் எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட முடியும்.
இதே அடிப்படையில்தான் கேரள மாநிலத்தில் முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண பிள்ளை தேர்தலில் போட்டியிடதேர்தல் கமிஷன் அனுமதித்தது. அவர் வெற்றியும் பெற்றார்.
அவர் மீது ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டபோது அவர் ஏற்கனவே எம்.எல்.ஏவாக இருந்தார்.எனவே மீண்டும் தேர்தலில் போட்டியிட்டபோது சட்ட விதிகளின்படி அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டது.
இந்த அடிப்படையில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பியான பின் மீண்டும் எம்.எல்.ஏ. தேர்தலில்போட்டியிட ஜெயலலிதா திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.
ஆனால், திடீரென சாரங்கி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதால் அவர்களது திட்டம் குலைந்து போனது.காரணம், சாரங்கி மத்திய அரசு மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு வேண்டியவர் என்று அதிமுக தரப்பில்ஒரு எண்ணம் உள்ளது.
மேலும் அவர் மிக நேர்மையானவர் என்பதால் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி ஜெயலலிதாவின் வேட்புமனுவைத் தள்ளுபடி செய்து விட்டால் என்ன செய்வது என்ற கேள்வி அதிமுகவில் எழுந்தது.
சட்டசபைச் செயலாளர் ஜானகிராமன் இருந்தால் பிரச்சனை இல்லாமல் எம்.பியாகி விட முடியும் என்று அதிமுகதரப்பில் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. திடீரென சாரங்கி வந்ததால் அப்செட் ஆகிப் போன அதிமுகவட்டாரத்தில் சாரங்கியை நியமனம் செய்தது தவறு என்று குரல் எழுப்பியது.
ஆனால், சாரங்கியின் நியமனம் சரியானதுதான் என்று தேர்தல் கமிஷன் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.ஜானகிராமன் காண்டிராக்ட் அடிப்படையில் தான் சட்டசபைச் செயலாளராக உள்ளார்.
எனவே அவரிடம் தேர்தல் பணிகளை கொடுக்க முடியாது என்று மத்திய தேர்தல் கமிஷனர் கிருஷ்ணமூர்த்திவிளக்கம் கொடுத்துள்ளார்.
ஒருவேளை எம்.பி தேர்தலிலும் தனது வேட்பு மனு தள்ளுபடியாகி விட்டால் எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள்மத்தியில் பெரும் கெட்ட பெயர் ஏற்படும். தன்னால் தேர்தலில் நிற்கவே முடியாத சூழ்நிலை உருவாகி விடலாம்என்று ஜெயலலிதா தரப்பில் நினைத்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் தான் சாரங்கிக்கு எதிராக குரல் எழுப்பப்பட்டது.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications