வெற்றித் தமிழர் பேரவை: வைரமுத்துவின் புதிய அமைப்பு
சென்னை:
உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்க வெற்றித் தமிழர் பேரவை என்னும் அமைப்பை கவியரசு வைரமுத்துதொடங்கியுள்ளார்.
சமீபத்தில் தனது 49வது பிறந்த நாளில் அடி எடுத்து வைத்தார் கவியரசு வைரமுத்து. இதையடுத்து சென்னைகடற்கரையில் உள்ள அண்ணா சமாதிக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். திமுக தலைவர்கருணாநிதியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பின்னர் கடற்கரையில் உள்ள கம்பன், திருவள்ளுவர், பாரதியார், இளங்கோவடிகள், பாரதிதாசன், ஒளவையார்,வீரமாமுனிவர், கண்ணதாசன் ஆகியோரின் சிலைகளுக்கு மாலையணிவித்தார்.
வைரமுத்துவின் பிறந்த நாளை கவிஞர்கள் திருநாளாக கவியரசு வைரமுத்து சமூக இலக்கியப் பேரவைஆண்டுதோறும் கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டும் இவ்விழா நடந்தது. கவிஞர் இந்திரன், கவிஞர் பத்மாவதி தாயுமானவன் ஆகியோருக்கு இந்தவிழாவில் பண முடிப்பும் பாராட்டுப் பத்திரமும் வழங்கப்பட்டது.
பின்னர் வைரமுத்து பேசியதாவது:
இதுவரை கவிஞர் வைரமுத்து சமூக இலக்கியப் பேரைவை செயல்பட்டு வந்தது. நான வாழும் காலத்தில் எனபெயரோடு எந்த ஒரு அமைப்பும் இருப்பதை நான் விரும்பவில்லை.
எனவே, இன்று முதல் இந்தப் பேரவை வெற்றித் தமிழர் பேரவை என்று மாற்றப்படுகிறது.
உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்தல், உலகத் தமிழர்களின் உயிர், உடமை, மானம் காக்க குரல் கொடுத்தல்,உலகத் தமிழர்களின் தகுதியை மேம்படுத்த தன்முனைப்பும் தன்னம்பிக்கையும் ஊட்டுதல், தகுதி மிக்கவர்களின்வேலைவாய்ப்புக்கு உதவுதல் போன்றவற்றில் இப்பேரவை கவனம் செலுத்தும்.
தமிழனின் உயர்ந்த படைப்புகளை இந்தியாவின் பிற மொழியாளர்களுக்கும், உலக மொழியாளர்களுக்கும் மொழிபெயர்த்து அறிமுகம் செய்யப்படும்.
பழங்காலத்தில் தமிழன் உயர்ந்து நின்றான். கங்கையைத் தாண்டி இமயமலை வரை சென்று வெற்றிக் கொடிநாட்டினார்கள் ராஜேந்திர சோழனும், ராஜராஜ சோழனும்.
இனறும் நம் தமிழர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள். அமரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி நிலையமானநாஸாவில் 38.4 சதவீதத்தினர் இந்தியர்கள் தான். மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் 34.4 சதவீதம் பேர் இந்தியர்கள்தான் பணியாற்றுகிறார்கள்.
இந்தியாவில் படித்து அவர்கள் அமெரிக்காவில் பணியாற்றுகிறார்கள். ஏன் இந்த நிலை?. அங்கு அவர்களுக்குவாய்ப்பும் வசதியும் தரப்படுகிறது. இந்த இந்தியர்களின் ஆற்றலை ஒன்றுசேர்த்தால் இந்தியா மிகச் சீக்கிரமேவல்லரசாகி விடும்.
இவ்வாறு வைரமுத்து கூறினார்.
விழாவில் இயக்குனர்கள் பாரதிராஜா, சரண், எழில், பாலா, பட அதிபர்கள் தாணு, ஆஸ்கார் மூவிஸ் ரவி, இசைஅமைப்பாளர்கள் பரத்வாஜ், ஹரீஸ் ஜெயராஜ், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் ஆதிகுமணன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள பேரவையின் தலைவராக வைரமுத்துவும், பொதுச் செயலாளராக முத்தையாவும்,துணைப் பொதுச் செயலாளராக செழியனும், பொருளாளராக பாஸ்கரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications