விசாரணை கமிஷனை புறக்கணிப்பதா? கருணாநிதிக்கு ஜெ. கண்டனம்
சென்னை:
கருணாநிதி கைது குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட ராமன் தலைமையிலானவிசாரணையை புறக்கணிக்கப் போவதாக தி.மு.க. கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இது குறித்து சென்னையில் செவ்வாய்க்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது:
போலீஸ் நடவடிக்கைகள் குறித்த புகாரின் பேரில் விசாரிக்க கமிஷன்கள்அமைக்கப்படுவது புதிதல்ல. இதற்கு முன் அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆட்சிகாலங்களிலும் கமிஷன்கள் அமைக்கப்பட்டன.
ஆனால் கமிஷன் அமைக்கப்பட்டதால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று அர்த்தம் அல்ல. சில சம்பவங்களில் மட்டுமே நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
உண்மையில் தவறு செய்தவர்கள் யார் என்பதை அறியவே இந்த கமிஷன்கள் உதவும்.
விசாரணை கமிஷனை புறக்கணிக்கப் போவதாக கருணாநிதி கூறியிருப்பதுகண்டிக்கத்தக்கது. நீதித்துறையை இது அவமதிப்பதாகும். பொது வாழ்க்கையின்கண்ணியத்தை இது பாதிக்கும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.


Click it and Unblock the Notifications
