ஜெயலலிதா எரிச்சல்: இளங்கோவன் பதவிக்கு ஆபத்து
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்து இளங்கோவனை உடனடியாக நீக்க வேண்டும் என காங்கிரஸ்மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் ஐயர் கட்சித் தலைவி சோனியாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டு வந்த மணிசங்கர் ஐயர் இந்தக்கோரிக்கையை விடுத்தார். ஜெயலலிதாவின் நெருக்குதல் காரணமாகவே அவர் இவ்வாறு கூறியிருக்கலாம் எனத்தெரிகிறது.
சமீபத்தில் அதிமுகவுக்கும் ஜெயலலிதாவுக்கும் எதிராக கடும் கருத்துக்களைத் தெரிவத்திருந்தார் இளங்கோவன்.தமிழகத்தில் அதிமுக, திமுக இரு கட்சிகளையும் ஒழித்துக் கட்டும் நேரம் வந்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.
வரும் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுக்கு அதிமுக அதிக இடங்களை ஒதுக்காவிட்டால், இரு முக்கிய திராவிடகட்சிகளிடமிருந்தும் விலகி காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.
தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் எல்லோரது கவனத்தையும் வேறுபக்கம் அவர் இவ்வாறு பேசியதாகக் கருதப்படுகிறது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என தங்கபாலு,அன்பரசு உள்ளிட்டவர்கள் கோரி வருகின்றனர்.
அவர்களை அதிமுக தான் தூண்டிவிடுவதாகக் கருதும் இளங்கோவன் ஜெயலலிதாவுக்கு எதிராகவும் கருத்துத்தெரிவித்திருந்தார். இதைத் கண்டித்து அதிமுக தரப்பிலிருந்தும் அறிக்கை விடப்பட்டது.
ஜெயலலிதாவின் உத்தரவின்பேரில் அதிமுக தலைமைக் கழகச் செயலாளர் செங்கோட்டையன் விடுத்தஅறிக்கையில், இளங்கோவனையும் காங்கிரஸ் கட்சியையும் ஒரு பிடி பிடித்திருந்தார். இந்த அறிக்கையில்சோனியாவுக்கும் சேர்ந்து திட்டு விழுந்தது.
மணிசங்கர் ஐயர் கோரிக்கை:
இந் நிலையில் செவ்வாய்க்கிழமை சென்னையில் போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினார்மணிசங்கர் ஐயர். இளங்கோவனின் பேச்சால், கடும் எரிச்சல் அடைந்துள்ள ஜெயலலிதாவை சமாதானப்படுத்தவேகாங்கிரஸ் கட்சித் தலைமை அவரை சென்னைக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
தன்னைச் சந்தித்த மணிசங்கர் ஐயரிடம் பேசிய ஜெயலலிதா, காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியிலிருந்துஇளங்கோவனை நீக்கினால் தான் உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி தொடரும் இல்லாவிட்டால், காங்கிரசைகூட்டணியிலிருந்து விரட்டுவோம் எனக் கூறியதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்புக்குப் பின் நிருபர்களிடம் மணிசங்கர் ஐயர் கூறியதாவது:
கட்சியின் தலைமையின் அனுமதி இல்லாமல் இளங்கோவன் அதிகப் பிரசங்கித்தனமாக அதிமுகவுக்கு எதிராககருத்துத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால், கட்சியே காணாமல் போய்விடும்.இது தான் உண்மை நிலை.
இதை கட்சித் தலைமை (சோனியா) உணர வேண்டும். உடனடியாக இளங்கோவனை நீக்க வேண்டும்.
1998ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டபோது ஒரு இடம் தவிர எல்லாதொகுதிகளிலும் டெபாசிட் பறி போனது என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
இளங்கோவனை வைத்துக் கொண்டு அதிமுகவுடனான உறவை நீடிக்க முடியாது.
கருணாநிதி கைது சரி தான்:
திமுக தலைவர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் மாறன், பாலு ஆகியோரை கைது செய்தது சரி தான். இவ்விஷயத்தில் தமிழக அரசுடன் மத்திய அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்கிறது.
1999ம் ஆண்டில் பா.ஜ.க. அரசை ஜெயலலிதா கவிழ்த்தார். இதனால், அவரை பழிவாங்கும் நோக்கத்தில் மத்தியஅரசு நடந்து கொள்கிறது. தமிழக கவர்னர் பாத்திமா பீவியை நீக்கியதும் தவறு.
இவ்வாறு ஐயர் கூறினார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications