காஞ்சிபுரத்தில் சாராயம் காய்ச்சிய 53 பெண்கள் கைது
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் இன்று (செவ்வாய்கிழமை) போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ரூ 2.5 லட்சம் மதிப்புள்ளகள்ளச்சாராயம் பிடிபட்டது.
இதில் 53 பெண்கள் உட்பட 131 பேர் கைது செய்யப் பட்டனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில்,
மொத்தம் 550 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. இதனுடன், சாராயம் காய்ச்சத்தேவையான நொதி திரவம் 6,750 லிட்டரும், 566 லிட்டர் எரி சாராயமும் கைப்பற்றப்பட்டது.
இவற்றின் மொத்த மதிப்பு ரூ 2.5 லட்சம். இதில் ஈடுபட்ட 131 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 53 பேர் பெண்கள்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications