ஜெ.வுக்கு ரமேஷ் எழுதிய கடைசி கடிதம்
சென்னை:
திங்கள்கிழமை குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சென்னை மாநகராட்சி காண்ட்ராக்டரும் மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பருமான ரமேஷ் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் எழுதிய கடிதத்தில், "என்போன்ற சாதாரணமானவர்கள் மீது வழக்கு போட்டு தண்டிக்க வேண்டாம்" என்று ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.
அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
நானும் என் மனைவி காஞ்சனாவும் 10 நாட்களுக்கு முன்பே குடும்பத்துடன் தற்கொலை செய்ய திட்டமிட்டுஇப்போது செய்துள்ளோம்.
என் வீட்டில் போதைப் பொருள் வைத்திருந்ததாக வழக்குப் போட்டு மேலும் என்னைக் கேவலப்படுத்துவார்கள்.
என் 3 குழந்தைகளையும் வைத்துக் கொண்டு என்னால் சமாளிக்க முடியாது.
இப்பொழுதும் என் தாயின் மீது ஆணையாகவும், நான் வணங்கும் தெய்வங்கள் மீது ஆணையாகவும்,குருவாயூரப்பன் மீது ஆணையாகவும் நான் தெய்வசிகாமணியிடம் 1 ரூபாயோ, 1 லட்சமோ, 1 கோடியோ, 7கோடியோ வாங்கவில்லை. (தெய்வசிகாமணியைக் கடத்தியதாகத் தான் ரமேஷ் மீது வழக்கு போடப்பட்டுள்ளது.)
இதை எனது உயிர் நீத்த 3 குழந்தைகள் மீதும், என் மனைவி மீதும் ஆணையிட்டு உயிரை விடுகிறேன்.தெய்வசிகாமணி எனக்கில்லையென்றாலும் தெய்வத்திற்கு பதில் சொல்லி ஆக வேண்டும்.
என் போன்ற சாதாரணமானவர்கள் மீது வழக்கு போட்டு தண்டிக்க வேண்டாம் என்று முதல்வர் ஜெயலலிதாஅவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இந்த பொய் வழக்குகளைச் சந்திப்பது தவிர, கமிஷன் வாங்கியவன் என்று பத்திரிக்கைகளில் பெயர் வருவதை விடஉயிரைவிடுவதே மேல் என்று முடிவெடுத்து நான், என் மனைவி, 3 குழந்தைகளும் உயிரைவிட்டுள்ளோம்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இது ரமேஷ் எழுதியது தானா அல்லது வேறு ஒருவர் எழுதியதா என்றும் போலீசார் ஆராய்ந்துவருகின்றனர்.
சாப்பிட்டது சயனைடா
இறந்து கிடந்த ரமேசும் அவரது குடும்பத்தினரும் படுக்கையறையில் அலுங்காமல் படுத்திருந்தனர். சாதாரண விஷமருந்து சாப்பிட்டால் வாந்தி வந்து ஆளைப் புரட்டி எடுத்து விடும்.
ஆகையால் அவர்கள் சாப்பிட்டது சயனைடாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஆனால், வீட்டில் பூச்சிமருந்து டின்னும், பேண்டா பாட்டிலும் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஸ்டாலினின் மிக நெருங்கி நண்பரான ரமேஷ் ஒரு தொழிலதிபர். அவர் ராகா இம்பக்ஸ் (பி) லிமிடெட் என்றநிறுவனத்தை நடத்தி வந்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications