ஆக்ரா பேச்சுவார்த்தை: நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
டெல்லி:
ஆக்ரா பேச்சுவார்த்தை சம்பந்தமான அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது.
பிரதமர் வாஜ்பாயும், பாகிஸ்தான் ஜனாதிபதி பர்வேஸ் முஷாரப்பும் இந்த 2 நாட்களிலும் 4 முறை பேசியும்,பேச்சுவார்த்தை எந்தவிதமான பலனையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
முஷாரப்பும் மிகவும் சோகமான முகத்துடன்தான் இஸ்லாமாபாத் போய்ச் சேர்ந்தார் என்று கூறப்படுகிறது.
ஆக்ரா பேச்சுவார்த்தைக்குப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எந்தவிதமான எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.இது வரவேற்கத் தகுந்த ஒன்றுதான் என்றே அரசியல் கட்சிகள் கூறி வந்தன.
ஆனாலும், பேச்சுவார்த்தைக்கு முறையாக எதுவும் தயார் செய்யாமல் போனதால்தான், பேச்சுவார்த்தைதோல்வியுற்றது என்று காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் மத்திய அரசைக் குற்றம் சுமத்தி வருகின்றன.
இதுகுறித்து, மத்திய அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவை மத்திய அரசைவலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், ஆக்ரா பேச்சுவார்த்தை பற்றி அரசியல் கட்சிகளிடம் விளக்குவதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டம்வியாழக்கிழமை நடைபெறவிருக்கிறது.
ஆக்ரா பேச்சுவார்த்தையின்போது நடந்தவற்றை அனைத்தையும் இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகளிடம் விளக்கிக்கூறவுள்ளார் வாஜ்பாய்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications