2 மாஜி அமைச்சர்கள் மீது ஊழல் வழக்கு
சென்னை:
வீராணம் ஏரியை ஆழப்படுத்துதல், கிளைக் கால்வாய்களைத் தூர்வாருதல் பணியில் ரூ.6 கோடி ஊழல்நடந்துள்ளதாக முந்தைய திமுக அரசின் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்குஎதிராகப் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவி ஏற்றதிலிருந்தே முன்னாள் திமுக அரசில் நடந்த ஊழல்கள்பற்றித் தோண்டித் துருவி விசாரிக்க ஆணையிட்டுள்ளார். புழுத்த அரிசி ஊழல், புண்ணாக்கு ஊழல், மேம்பாலஊழல் என்று வாரத்திற்கு ஒரு ஊழலை வெளிட்டுக் கொண்டிருந்தார் ஜெயலலிதா.
மேம்பால ஊழல் வழக்கில் முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கைதுசெய்யப்பட்டதுதான் "ஹைலைட்". இவருடன் சென்னை மாநகர மேயர் மு.க. ஸ்டாலினும், சில மாஜிஅமைச்சர்களும், சில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் கைதானதும், கருணாநிதி கைது செய்யப்பட்டபோது நடந்ததாகக்கூறப்படும் போலீஸ் அராஜகங்களும் தனி விஷயம்.
இந்நிலையில், மேலும் 2 முன்னாள் திமுக அமைச்சர்களின் ஊழல்களும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளன.வீராணம் ஏரியை ஆழப்படுத்துதல் மற்றும் கிளைக் கால்வாய்களைத் தூர்வாருதல் போன்ற பணிகளில் ரூ.6கோடிக்கு ஊழல் நடந்திருப்பதாக, கடலூர் மாவட்டம் கூடலையத்தூரைச் சேர்ந்த அப்பாத்துரை என்பவர் சென்னைமுதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.
அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது:
வீராணம் ஏரியை பலப்படுத்துவதற்காகவும், வீராணம் ஏரியின் தண்ணீர் ஏரியின் கொள்ளளவை அதிகப்படுதவும்1999ம் ஆண்டு அரசு திட்டம் வகுத்தது. இதன் அடிப்படையில் வீராணம் ஏரியில் இருந்து தண்ணீர் செல்லும்கிளைக் கால்வாய்களில் தூர்வாரும் பணியை மேற்கொள்ள முடிவு எடுக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்காக ரூ.110 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. செந்தில்குமார் மற்றும் பெரியசாமி ஆகியோரிடம்இதுகுறித்த ஒப்பந்தப் பணிகள் வழங்கப்பட்டன. இவர்கள் தங்கள் பணியை முடித்து விட்டதாக ரசீதுகள்கொடுத்தனர். அப்போதைய அமைச்சர்கள் துரைமுருகன் மற்றும் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் ஆகியோர் மூலம்இவர்களுக்குப் பணமும் வழங்கப்பட்டு விட்டது.
ஆனால், இந்த ஒப்பந்தப் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேட்டின் மூலமாக அரசுக்கு ரூ.6கோடியே 15 லட்சம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.
இது பற்றி நான் மாவட்ட கலெக்டர் மற்றும் முதல்வருக்கு அப்போதே மனுக்கள் அனுப்பி இருந்தேன். இந்த புகார்மனுவை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணைக்கு அனுப்ப உத்தரவிட வேண்டும் என்று அப்பாத்துரை தன்மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு சென்னை முதன்மை நகர செஷன்ஸ் நீதிமன்றத்தின் முன் விசாரணைக்கு வந்தது. நீதிபதி அசோக்குமார்இந்த மனு மீதான விசாரணையை இந்த மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications