காங்கிரஸ்: மணிசங்கரஐயர் மீது இளங்கோவன் பாய்ச்சல்
திண்டுக்கல்:
காங்கிரசில் தனக்கக் கொடுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை மணிசங்கர ஐயர் தவறாகப் பயன்படுத்துகிறார்என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் குற்றம் சாட்டியுள்ளார்.
அ.தி.மு.கவை சேர்ந்த செங்கோட்டையன் கூறி வரும் கருத்துக்களால் தமிழக காங்கிரஸ் தலைமையில் எந்தவிதமான மாற்றமும் வராது. என் பதவிக்கும் எந்த பங்கமும் வராது. காங்கிரசுடனான கூட்டணி குறித்துஜெயலலிதாதான் முடிவு செய்ய வேண்டும் என்றுதான் நான் சொன்னேன். இப்போதும் அத்ைதான் சொல்கிறேன்.
மணிசங்கர ஐயர் என்னை தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளார். அவர்தனது கருத்துக்களை கட்சி தலைவர் சோனியாவிடம்தான் தெரிவிக்க வேண்டுமே தவிர, பத்திரிக்கையாளர்களிடம்தெரிவிக்கக்கூடாது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள கருத்து சுதந்திரத்தை மணிசங்கர ஐயர் தவறாகபயன்படுத்தியுள்ளார்.
தமிழகத்தில், காங்கிரஸ் ஆதரவால்தான் திராவிட கட்சிகள் வெற்றி பெற்று வருகின்றன. வரும் உள்ளாட்சித்தேர்தலில் எங்களுக்கு தேவையான சீட்கள் அ.தி.மு.கவால் ஒதுக்கப்படாவிட்டால், சோனியா காந்தியிடம் பேசிஅ.தி.மு.கவுடனான கூட்டணி குறித்து மறு பரிசீலனை செய்யச் சொல்வேன் என்றார்.












Click it and Unblock the Notifications