கருணாநிதி கைது சம்பவம்: மத்திய அரசுக்கு தி.மு.க. தந்தி
சென்னை:
முன்னாள் முதல்வர் கருணாநிதி கைது சம்பவத்தின் போது, அராஜகம் செய்த போலீசார் மீது மத்திய அரசு நேரடிவிசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. தலைவர்கள் மத்திய அரசுக்குத் தந்தி ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கருணாநிதி கைது செய்யப்பட்ட 4 நாட்களுக்குள்ளாகவே, முரட்டுதனமாக நடந்து கொண்ட போலீசார் மீது மாநிலஅரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டது.
அதன்படி, கருணாநிதி கைது போது நடந்தது என்ன என்பது குறித்தும் போலீசார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்களா என்பது குறித்தும் விசாரிப்பதற்காக முதல்வர் ஜெயலலிதா விசாரணை கமிஷன் அமைத்தார். ஓய்வுபெற்ற நீதிபதி ஏ. ராமன் தலைமையில் இந்த தனிநபர் விசாரணைக் கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த விசாரணை கமிஷனை புறக்கணிப்பதாக தி.மு.கவினரும், தி.மு.க.தலைவர் கருணாநிதியும்கூறியுள்ளனர்.
இந்நிலையில் தவறு செய்த போலீசாரிடம் மத்திய அரசு நேரடி விசாரணை நடத்த வேண்டும், தவறுசெய்தவர்களுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்று கோரி முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட மூத்த தி.மு.க.தலைவர்கள் மத்திய அரசுக்குத் தந்தி அனுப்பியுள்ளனர்.
பிரதமர் வாஜ்பாய், மத்திய உள்துறை அமைச்சர் அத்வானி, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்ஜார்ஜ் பெர்ணான்டஸ், மத்திய சட்டத்துறை அமைச்சர் அருண் ஜெட்லி ஆகியோருக்கு இந்தத் தந்திஅனுப்பப்பட்டுள்ளது.
அவர்கள் தந்தியில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் போலீசாரின் கொடுமைகள் தொடர்ந்து வருகின்றன. தி.மு.க.தலைவர்கள் மீதும் தொண்டர்கள் மீதும்பொய் வழக்குகள் போடப்பட்டு வருகிறன. இதையடுத்து, போலீசார் தொந்தரவு காரணமாக, சென்னை நகர மேயர்மு.க. ஸ்டாலினின் நெருங்கிய நண்பரான தொழிலதிபர் ரமேஷ் கடந்த திங்கள்கிழமை தன் குடும்பத்தாருடன்தற்கொலை செய்து கொண்டார்.
அ.தி.மு.க.அரசு மத்திய அரசின் உத்தரவை மீறி வருகிறது. தமிழக அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தவறுசெய்த போலீஸ் அதிகாரிகளைக் காக்கும் விதத்தில் எடுக்கப்படுகிறது. மேலும், தவறு செய்த போலீசாரைஆதரித்துதான் அறிக்கைகளும் வெளியிட்டு வருகிறார்.
தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள விசாரணை கமிஷன், தமிழக அரசுக்கு சாதகமாகவே முடிவு அளிக்கப்படவேண்டும் என்ற எண்ணத்துடன்தான் அமைக்கப்பட்டு உள்ளது. விசாரணை கமிஷனின் முடிவுகள் எவ்வாறுஇருக்கும் என்பதை ஜெயலலிதாவின் அறிக்கைகளே தெளிவாகக் கூறுகின்றன.
மேலும், கருணாநிதி மற்றும் மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட போது தங்களுக்கு சாதகமாக இருக்கும்போலீஸ் தரப்பு வீடியோ காட்சிகளை ஒளிபரப்புமாறு கேபிள் டிவி ஆபரேட்டர்களை தமிழக அரசுகட்டாயப்படுத்தியுள்ளது.
தக்க நியாயம் கிடைக்க மத்தியஅரசு உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தி.மு.கவினர் அந்தத்தந்தியில் கூறியுள்ளனர்.
யு.என்.ஐ.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications