எம்.எல்,ஏ. ரங்கநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்
சென்னை:
தமிழ் மாநில காங்கிரஸ் ஜனநாயக பேரவையைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ரங்கநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் விதித்துசென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தன்னை ஜாமீனில் விடவேண்டும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் இவர் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த ஜாமீன் மனு வியாழக்கிழமை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம் முன்பு விசாரணைக்குவந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நிபந்தனை ஜாமீனில் ரங்கநாதனை விடுதலை செய்தார்.
தனது தீர்ப்பில் நீதிபதி கூறியதாவது:
ரங்கநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் ஜாமீன் காலத்தில் திருச்சியில் தங்கி இருக்க வேண்டும்.வேறு எங்கும் போகக்கூடாது.
மேலும் அவர் தினமும் காலையில் திருச்சி மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும்என்று நீதிபதி மலை சுப்ரமணியம் கூறியுள்ளார்.
இதை அடுத்து ரங்கநாதன் சிறையிலிருந்து விடுதலையானார்.












Click it and Unblock the Notifications