நினைவகம்: அரசு அனுமதி இல்லை
சென்னை:
சிவாஜிக்கு நினைவிடம் அமைக்க இடம் ஒதுக்குமாறு நடிகர் சங்கம் விடுத்துள்ள கோரிக்கையை உடனடியாக ஏற்கமுடியாத நிலை குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து, தென் இந்திய நடிகர் சங்கத்தின் சார்பாக, அதன் தலைவர் விஜயகாந்த் தமிழக அரசுக்கு மனு ஒன்றைஞாயிற்றுக்கிழமை அளித்தார்.
சிவாஜிக்கு நினைவிடம் அமைப்பதற்கு அரசு இடம் கொடுக்க வேண்டும. சிவாஜியின் பிறந்த நாளை நடிகர்கள்தினமாக அறிவிக்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்று இருந்தன.
இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை இரவு வரை சிவாஜியின் உடலை எங்கு தகனம் செய்வது என்பது பற்றி முடிவுசெய்யப்படமாலே இருந்தது.
இது தொடர்பாக விஜயகாந்த் கூறுகையில், தமிழக அரசிடம் சிவாஜிக்கு நினைவிடம் அமைக்க இடம் கேட்டுஇருக்கிறோம். இதற்கு அரசிடம் இருந்து பதில் வந்த பின்புதான், அவரது உடலை அடக்கம் செய்யும் இடம் முடிவுசெய்யப்படும். தமிழக அரசு இடம் ஒதுக்க மறுத்தால், பெசன்ட் நகரில் இருக்கும் மின்சார தகன மையத்தில்சிவாஜியின் உடல் தகனம் செய்யப்படும் என்றார்.
இந் நிலையில் நடிகர் சங்கத்தின் கோரிக்கையை தற்போதைக்கு ஏற்க முடியாது என்று தமிழக அரசுஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுஇருப்பதாவது:
மறைந்த நடிகர் நடிகர் திலகம் சிவாஜியின் வீட்டிற்கு முதல்வர் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு சென்றார்.சிவாஜியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அவர் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கோரிக்கை மனுவை முதல்வரிடம் கொடுத்தார். அதில் சிவாஜியின்நினைவைப் போற்றும் விதமாக அவருடைய உடலை தகனம் செய்து நினைவிடம் அமைக்க உரிய இடம்ஒதுக்கித்தருமாறு அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டு இருந்தது.
சென்னையில் சில பொது இடங்களில் நினைவகம் வைக்க நீதிமன்றத்தடை உள்ளது.
மறைந்த தலைவர் நெடுஞ்செழியனுக்கு நினைவகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது பற்றி ஏற்கனவேஅரசு பரிசீலனை செய்து வருகிறது.
அந்த இடத்தை தேர்வு செய்யும்போது, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனுக்கும் நினைவகம் அமைக்க உரியஇடத்தை ஒதுக்க அரசு பரிசீலனை செய்யும் என்று முதல்வர் தெரிவித்து உள்ளார் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டு உள்ளது.
-
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்?












Click it and Unblock the Notifications