இன்று கூடுகிறது நாடாளுமன்றம்
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை ஆரம்பமாகிறது.
இந்தியா-பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே ஆக்ராவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு முதல் முறையாகநாடாளுமன்றம் கூடுகிறது. இந்தப் பேச்சுவார்த்தை தொடர்பான விவாதமும் இக்கூட்டத் தொடரில் விவாதிக்கப்படஉள்ளது என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறியுள்ளார்.
செவ்வாய்க்கிழமை காலை கேள்வி நேரம் முடிந்த பிறகு, ஆக்ரா பேச்சுவார்த்தை பற்றி பிரதமர் வாஜ்பாய் விரிவானஅறிக்கையைத் தாக்கல் செய்கிறார். நாடாளுமன்றத்திலும், டெல்லி மேல் சபையிலும் இந்த அறிக்கை மீதானவிவாதங்கள் நடைபெறும்.
ஏற்கனவே நிலுவையில் உள்ள 11 மசோதாக்கள் தவிர, மேலும் 12 புதிய மசோதாக்கள் இந்தக் கூட்டத் தொடரில்தாக்கல் செய்யப்பட உள்ளன. விவசாயிகள் உரிமை மசோதா, மத்திய கண்காணிப்பு கமிஷன் மசோதா, அரசியல்சட்ட 85வது திருத்த மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற அரசு தற்போது தயாராக இருக்கிறது.
வங்கிகளைத் தனியார் மயமாக்க வகை செய்யும் மசோதாவும் தாக்கல் செய்யப்படவுள்ளது. வங்கிகள் தனியார்மயமாவதைக் கண்டித்து ஏற்கனவே வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும்அவர்கள் வரும் 25ம் தேதி நாடாளுமன்றத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
ஆக்ரா பேச்சுவார்த்தை தவிர, யூ.டி.ஐ. பிரச்சினை, மணிப்பூர் கலவரம், முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிமற்றும் 2 மத்திய அமைச்சர்களின் கைது விவகாரம் ஆகிய சம்பவங்கள் பற்றியும் சூடான விவாதங்கள் நடத்தஎதிர்க்கட்சியான காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது.
இச்சம்பவங்களை எழுப்பி, மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தவும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்தீவிரம் காட்டி வருகின்றன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications