சிவாஜி பெயரில் விருது வழங்க கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கடந்த சனிக்கிழமை மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் பெயரால் மத்திய அரசு விருது வழங்க வேண்டும் என்றுதென்னிந்திய திரைப்பட வர்த்தக சபைத் தலைவர் ஏ.வி.எம். சரவணன் திங்கள்கிழமை கோரிக்கை விடுத்துள்ளார்.
தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை சார்பில், மறைந்த நடிகர் திலகம் சிவாஜிகணேசனுக்கு இரங்கல் கூட்டம்நடத்தப் பட்டது. அதில் சபையின் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சரவணன் பேசுகையில், சிவாஜி பெயரில் பெரிய விருது ஒன்றை நிறுவி மத்திய அரசு அவரைக்கெளரவப் படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், திரையுலகம் சார்பில் சிவாஜிக்கு நினைவிடம் அமைக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.












Click it and Unblock the Notifications