போயஸ்தோட்ட பண விவகாரம்: வழக்குக்கும் தி.மு.கவுக்கும் தொடர்பில்லை
சென்னை:
தன் கணவர் மீதான இரண்டு வழக்குகளும் பொய்யானவை, எனவே அந்த வழக்குகளைரத்து செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை தொழிலதிபர் சலாவுதீனின் மனைவி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததற்கும் தி.மு.கவுக்கும் எந்த விதத் தொடர்பும் இல்லைஎன்று தி.மு.க.தலைவர் கருணாநிதி கூறி உள்ளார்.
சலாவுதீனின் மனைவி தன் மனுவில் கூறியிருப்பதாவது:
சென்ற 1ம் தேதியில் இருந்த 6ம் தேதி வரை முதல்வர் ஜெயலலிதாவின் துணைச்செயலாளர்களாக இருக்கும் நடராஜன், சந்திரமோகன் ஆகிய ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளிடம்என் கணவர் தொலைபேசியில் பேசி உள்ளார்.
இந்த வழக்குகளை விசாரித்து வரும் துணை கமிஷனர் ராஜேந்திரனுடனும் என் கணவர்தொலைபேசி உள்ளார். அப்போது அவர்கள் வழக்குகள் பொய்யானவை என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தில் சுதாகரனும், சலாவதீனும் எடுத்துச் சென்றநகைகள், பணத்தைக் கொடுத்துவிட்டால் வழக்கில் இருந்து சலாவுதீனை விடுவிப்பதாகவுமகூறியுள்ளனர்.
சலாவதீனிடம் அவர்கள் 57 லட்சம் கொடுக்குமாறும் கேட்டுள்ளனர். இந்தத் தொலைபேசிபேச்சு டேப் செய்யப்பட்டுள்ளது. அதுவும் இந்த மனுவுடன் தாக்கல் சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இந்தப் பணத்தை சுதாகரன் தான் எடுத்துச் சென்றார். என் கணவர் எடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் என் கணவர் மீதும் அவரது தம்பி மீதும் போதைப் பொருள்வைத்திருந்ததாக ஜெயலலிதா வழக்குப் போட்டுள்ளார்.
நான் சமர்பித்துள்ள டேப் ஆதாரத்தைக் கேட்டால் முழு உண்மையும் தெரிய வரும். என்கணவர் மீது போடப்பட்ட வழக்குகள் பொய்யானவை. எனவே அந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட இந்த மனுவின் பின்னணியில் தி.மு.க இருக்கிறது எனஜெயலலிதா குற்றம் சாட்டி இருந்தார். இதை மறுத்து சென்னையில் புதன்கிழமை கருணாநிதிவெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா பத்திரிக்கையாளர் கூட்டத்தில் செவ்வாய்க்கிழமை கூறுகையில் சென்னைதொழிலதிபரின் மனைவி தாக்கல் செய்துள்ள மனுவின் பின்னணியில் தி.மு.கவும் உள்ளது.
இந்த அரசுக்கும் எனக்கும் கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கத்துடன் கருணாநிதிசெயல்படுகிறார் என்று கூறியிருந்தார் இது முற்றிலும் தவறான கருத்து.
சலாவுதீனின் மனைவி தாக்கல் செய்த மனுவுக்கும் தி.மு.கவுக்கும் எந்த விதமான தொடர்பும்கிடையாது என்று கூறி உள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications