அரசு ஊழியர் ஸ்ட்ரைக்: தமிழகத்தில் பாதிப்பில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மத்திய, மாநில அரசு ஊழியர்கள் புதன்கிழமை ஒரு நாள் நாடு தழுவிய அடையாளவேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் பணிகள் எதுவும்பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதிலும் இருந்து 1 கோடி பேர் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் மட்டும் 3 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர் என்றார்.
ஆனால், இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தில் அவ்வளவாக ஆதரவு இல்லை.வங்கிகள், ரயில்வே, மின்துறை ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ளவில்லை.
மத்திய-மாநில அரசுகளில் ஊழியர்கள் அதிக அளவில் பணிக்கு வரவில்லைஎன்றாலும் கூட பணிகள் பாதிக்கப்படவில்லை. குறைந்த அளவிலான ஊழியர்களுடன்மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் இயங்கிக் கொண்டு தான் உள்ளன.












Click it and Unblock the Notifications