சென்னை போலீஸ் கமிஷனரையும் அழைக்கிறது மத்திய அரசு
சென்னை:
முன்னாள் தமிழக டி.ஜி.பியான ராஜகோபாலனை மத்திய அரசு அழைத்ததையடுத்து, சென்னை மாநகர போலீஸ்கமிஷனர் முத்துக்கருப்பனும் மத்திய அமைச்சரவை செயலகப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
ஆனால், தேசிய பாதுகாப்புப் படை என்று கருதப்படும் கறுப்பு பூனைப் படையின் தலைவராக மத்திய உள்துறைஅமைச்சகம் நியமித்துள்ளது. ஆனால், இதுவரை தமிழ அரசிடம் இருந்து அவர் விடுபடவில்லை. ஆகஸ்டு 1ம்தேதிக்குள் விடுபடாவிட்டால், அவரிடமிருந்து அப்பதவி கை நழுவிப் போய்விடும்.
இந்நிலையில், மத்திய அமைச்சரவையின் செயலகப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார் முத்துக்கருப்பன். இவருடன்டி.ஐ.ஜியாக இருக்கும் ஜார்ஜ் மற்றும் துணை போலீஸ் கமிஷனர் கிறிஸ்டோபர் நெல்சன் ஆகியோரையும் மத்தியஅரசு அழைத்துள்ளது.
இவர்கள் 3 பேரையும் உடனடியாக விடுவித்து, டெல்லிக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கடிதம்அனுப்பியுள்ளது மத்திய அரசு.
கருணாநிதி கைது சம்பவத்தில் தொடர்புள்ளது மட்டுமல்லாமல், ரமேஷ் குடும்பத்தின் தற்கொலை பற்றியும்தற்போது விசாரித்து வருகிறார் முத்துக்கருப்பன். இந்த நிலையில் அவரை எப்படி விடுவிப்பது என்றும் தமிழக அரசுமுழித்துக் கொண்டிருக்கிறது.
இது தவிர, தமிழகத்தின் முக்கியக் காவல் துறைப் பதவியில் உள்ளவர்களை எப்படி மத்திய அரசு அழைக்கலாம்என்று தமிழக அரசு குழம்பிக் கொண்டிருக்கிறது.
ஆனால், மாநிலத்தில் உள்ள போலீஸ் அதிகாரிகளை அழைக்கும் உரிமையும் அதிகாரமும் மத்திய அரசுக்குஉள்ளது என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, விரைவில் பரிசீலித்து முடிவெடுக்கவிருப்பதாகத் தமிழக அரசு தற்போது கூறியுள்ளது.
திமுகவின் நிர்ப்பந்தம் காரணமாகவே மத்திய அரசு ஒருவர் பின் ஒருவராக தமிழகத்திலிருந்து போலீசாரைஅழைத்துக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications