For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. அரசை கண்டித்து ஆகஸ்டு 6ல் தமிழகம் முழுவதும் திமுக பேரணி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஜெயலலிதா அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து, ஆகஸ்டு 6ம் தேதி தமிழ்நாடு முழுவதும் 100 இடங்களில்கண்டனப் பேரணி நடத்தப்படும் என்று திமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

மிக பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் திமுகவின் பொதுக் குழுக் கூட்டம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.

கட்சித் தலைவர் கருணாநிதியின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் இக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில்அன்பழகன், ஆற்காடு வீராசாமி, ஆலடி அருணா மற்றும் சுப்புலட்சுமி ஜெகதீசன் ஆகியோர் முன்னிலைவகித்ததனர்.

இவர்களைத் தவிர ஸ்டாலின், மாறன், பொன்முடி, பாலு, நடிகர் நெப்போலியன், சரத்குமார் உட்பட அனைத்துபொதுக்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு திரும்ப வந்துள்ளதால், தலித் கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ள சூழ்நிலையில் இது பற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ராமதாஸ் தன்னை வந்து சந்திக்காததால் பொதுக்குழுவில் அதைப்பற்றி விவாதிக்கவில்லை என்றுகருணாநிதி பின்னர் நிருபர்களிடம் கூறினார்.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

எதிர்கட்சியினர் மற்றும் வேண்டாதவர்கள் மீது பொய் வழக்கு போடும் ஜெயலலிதா அரசை கண்டிக்கிறது.கருணாநிதி, மாறன் மற்றும் பாலு போன்றவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது. போலீசாரின் அராஜகச்செயலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜெயலலிதா அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து வரும் ஆகஸ்ட் 6-ந்தேதி 100 இடங்களில் கண்டனப் பேரணிநடத்தப்படும்.

சென்னை நகரின் குடிநீர்பிரச்சனையை தீர்க்க கிருஷ்ணா நீரை அதிக அளவில் பெற முயற்சிக்க வேண்டும்.உள்ளாட்சித் தேர்தலுக்குள் புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்க அரசு உத்தரவிட வேண்டும்.

இது போன்ற முக்கியமான தீர்மானங்கள் உட்பட பொதுக்ழுவில் மொத்தம் 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் பொதுக்குழு முடிந்தவுடன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கருணாநிதி கூறியதாவது:

பா.ம.க. விவகாரத்தில் நான் இன்னும் கிருஷ்ணசாமியுடன் பேசவில்லை. மேலும் ராமதாசிடமும் பேச்சுநடத்தவில்லை. பேசிய பிறகுதான் இதுபற்றிக் கருத்துக் கூற முடியும் என்றார்.

சென்னை போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பன் உள்ளிட்ட 3 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது.அவர்கள் திறமைசாலிகள் என்று மத்திய அரசுப்பணிக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இது திமுகவின் சதி என்றுசொல்லி வருகிறார்கள்.

இதற்கெல்லாம் திமுக பொறுப்பாக முடியாது. ஜெயலலிதாவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆக்ராபேச்சுவார்த்தைதோல்வியில் முடிய திமுகதான் காரணம் என்று கூட சொல்வார்கள் என்றார் கருணாநிதி கிண்டலுடன்.

முன்னதாக கூட்டத்திற்கு வந்த ஆற்காடு வீராசாமி சக்கர நாற்காலியில் அமர்ந்து வந்தார். மேடையில் ஏறும்போதும்கைத்தாங்கலாக அழைத்துச் செல்லப்பட்டார். இவர் வீட்டில் வழுக்கி விழுந்து விட்டதால் கடந்த 1 மாதத்திற்கும்மேலாக அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X