துப்பாக்கி கேட்ட பூலன்தேவி
டெல்லி:
பூலன்தேவி கொலையில் ஷேர்சிங் ராணா, ரவீந்தர் ஆகிய இருவர் தவிர மேலும் 2 பேருக்கு தொடர்புள்ளதாகத்தெரியவந்துள்ளது.
தனது ஜாதியைச் சேர்ந்த 21 தாகூர்கள் 20 ஆண்டுகளுக்கு முன் பூலன்தேவியால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கத் தான்ஷேர்சிங் ராணா, பூலன்தேவியைக் கொலை செய்ததாகக் கூறினான். அவனுக்கு உதவியாக இருந்ததாகக் கருதப்படும் அவனதுகூட்டாளி ரவீந்தரை போலீசார் தேடி வருகின்றனர்.
ராணா, ரவீந்தர் ஆகிய இருவர் தவிர ரஜ்வீர், சேகர் ஆகிய 2 பேருக்கும் இந்தக் கொலையில் தொடர்பிருப்பதாக போலீஸ்விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரஜ்வீர், சேகர், ரவீந்தர் ஆகிய மூவரும் ராணாவுடன் சேர்ந்து ரூர்கியில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளனர். ராணா தனது கரும்பச்சைநிற மாருதி காரில் வந்துள்ளார். இந்த மூவரும் வெள்ளை நிற மாருதிர் காரில் ராணாவின் காரைப் பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
மதிய உணவுக்காக பூலன்தேவி இன்னொரு எம்.பியின் காரில் வீட்டுக்கு வந்திறங்கியவுடன் பச்சை மாருதி காரில் அமர்ந்திருந்தராணா, ரவீந்தர், சேகர் ஆகிய மூவரும் அதிலிருந்து இறங்கி பூலன்தேவியை சுட்டனர். அப்போது ரஜ்வீர் சிறிது தூரத்தில் வெள்ளைமாருதி காரில் உட்கார்ந்து யாரும் வருகிறார்களா என கண்காணித்துக் கொண்டிருந்தார்.
கொலை நடந்த பின்னர் மூவரும் பச்சை மாருதி காரில் தப்ப, அவர்களை ரஜ்வீர் வெள்ளை மாருதியில் பின் தொடர்ந்தார். பின்னர்ஓரிடத்தில் மாருதி காரை விட்டுவிட்டு மூவரும் ஆட்டோவில் ஏறிக் கொண்டனர். சிறிது தூரத்தில் ஆட்டோவில் இருந்தும்அவர்கள் இறங்கிக் கொண்டனர்.
இதையடுத்து மூவரையும் ரஜ்வீர் தான் தனது காரில் ஏற்றிக் கொண்டு பஸ் நிலையம் அழைத்துச் சென்று டேராடூனுக்கு தப்பிச்செல்ல உதவினார்.
கொலை நடந்தபோது இவர்கள் செல்போனில் தொடர்ந்து பலரிடம் பேசியுள்ளனர். 2 செல்போன்கள் மூலம் இவர்கள்பேசியுள்ளனர். இவர்கள் யார் யாரிடம் பேசினார்கள் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
இப்போது ராணா மட்டும் தான் பிடிபட்டுள்ளார். மற்ற மூவரும் தலைமறைவாக உள்ளனர். இவர்களைப் பிடிக்க பெரும் படைகளத்தில் இறங்கியுள்ளது. இந் நிலையில் கைது செய்யப்பட்டுள்ள ராணாவை 14 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
துப்பாக்கி கேட்ட பூலன்:
முன்னதாக தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதனால், துப்பாக்கி வைத்துக் கொள்ள தனக்கு அனுமதி அளிக்க வேண்டும்என்றும் போலீசாரிடம் பூலன்தேவி பலமுறை கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், பூலனின் கடந்த கால வன்முறை நிறைந்த வாழ்க்கையைக் கருத்தில் கொண்ட போலீசார் அவருக்கு துப்பாக்கி லைசென்ஸ்வழங்க மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications