பா.ம.க. விவகாரத்தில் பின்வாங்குகிறது திமுக
சென்னை:
பா.ம.கவை மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேர்த்ததற்கு தலித் கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளதால், தனது நிலையில் இருந்து திமுக பின்வாங்க ஆரம்பித்துள்ளது.
கருணாநிதி கைது செய்யப்பட்டு ஜெயிலில் இருக்கும் போது ராமதாஸ் அவரைச் சந்தித்தார்.
அப்போது இருவரும் கூட்டணியில் பா.ம.க. மீண்டும் இணைவது குறித்துப் பேச்சு நடத்தினார்கள். மீண்டும்ராமதாஸை கூட்டணியில் சேர்த்துக் கொள்ள கருணாநிதி ஆதரவு தெரிவித்தார். இதைத் தொடர்ந்து பாட்டாளிமக்கள் கட்சி சமீபத்தில் வாஜ்பாயைச் சந்தித்து மீண்டும் தே.ஜ.கூட்டணியில் இணைந்தது.
இதற்கு பா.ம.க.வின் அரசியல் எதிரியான விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவன் கடும்எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அதைத் தொடந்து இன்னொரு தலித் கட்சியான புதியதமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமியும் பா.ம.கவைஇணைத்ததை எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை திருமாவளவன் கருணநிதியைச் சந்தித்தார். தனது கடும் எதிர்ப்பையும்தெரிவித்தார்.
இதற்கு முன்பு வரை பா.ம.க.வைக் கூட்டணியில் சேர்ப்பதற்கு திமுக எதிர்ப்புத் தெரிவிக்காமலிருந்தது. ஆனால்தலித் கட்சிகள் இரண்டும் எதிர்ப்பதைத் தொடர்ந்து திமுகவும் பின்வாங்குவதாகத் தெரிகிறது.
தலித் கட்சிகள் எதிர்ப்பு:
ஏனென்றால், தலித் கட்சிகளை விட்டுவிட்டு பா.ம.க.வைச் சேர்ப்பதால் திமுகவுக்குத்தான் நட்டம். ஏற்கனவேபா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருப்பதால் முஸ்லிம்களின் ஆதரவை திமுக இழந்துள்ளது.
இந்நிலையில் வருவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் கூட்டுறவு சங்கத் தேர்தல்களில் தலித் ஆதரவு திமுகவுக்குஅவசியமாகிறது. தலித் கட்சிகள் திமுக கூட்டணிவிைட்டு விலகினால், திமுகவின் பலம் மிகவும் குறையும். பாட்டாளிமக்கள் கட்சியை கூட்டணியில் சேர்ப்பதால் திமுகவைவிட பா.ம.கவுக்குத் தான் லாபம் கிடைக்கும்.
தான் பலமாக உள்ள வட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை பா.ம.க. கேட்டு வாங்கிவிடும். இங்கு திமுகபோட்டியிட முடியாது. இதனால், திமுகவுக்கு நஷ்டமே.
ஆனால், தலித் கட்சிகளுக்கு தமிழகம் முழுவதுமே பரவலான ஆதரவு உள்ளதால், அவர்களைக் கைவிட திமுகதயாராக இல்லை. உள்ளாட்சித் தேர்தல் நேரத்தில் விடுதலைச் சிறுத்தைகளும் புதிய தமிழகமும் திமுக கூட்டணியில்இருந்து விலகினால், திமுக தலித்களுக்கு விரோதமானது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இது தேர்தல்வெற்றியைப் பாதிக்கும் என திமுக தலைவர் கருணாநிதி கருதுகிறார்.
இதை நேற்று கருணாநிதி நிருபர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து உறுதி செய்யமுடிந்தது.
டெல்லியில் பா.ஜ.க தலைவர் ஜனாகிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடந்த பா.ஜ.க கூட்டத்தில், கூட்டணிக்குள்கட்சிகள் வருவதற்கும், விலகுவதற்கும் நெறிமுறைகள் வகுக்கப்படவேண்டும் என்றார்.
கருணாநிதி பேட்டி:
அதுபற்றிக் கேட்டதற்கு, தமிழக தே.ஜ.கூட்டணித் தலைவர் கருணாநிதி கூறுகையில், கட்சிகள் கூட்டணிக்குவருவதற்கும் போவதற்கும் நெறிமுறைகள் வகுக்கப்படவேண்டியது அவசியம்தான் என்று ஜனா.கிருஷ்ணமூர்த்தியின் கருத்தை ஆதரித்துப்பேசினார்.
அவரது கைது விவகாரத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டது குறித்துக் கேட்டதற்குக் கருத்துக்கூறமறுத்து விட்டார். ஆனால் நியாயம் நிலைநிறுத்தப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன் என்று மட்டும் கூறினார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications