முதல்வர் தலைமையில் இன்று கலெக்டர்கள் மாநாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின் முதன் முறையாக மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள்மாநாடு சென்னையில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இந்த மாநாட்டுக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமைவகிக்கிறார்.

2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், மாநில அமைச்சர்கள், அரசு செயலாளர்கள், துறைத் தலைவர்கள்ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.

முதல் நாளான புதன்கிழமை காலையில் மாவட்ட ஆட்சி தலைவர்கள், போலீஸ் அதிகாரிகள் கூட்டு மாநாடும்நடைபெறும்.

இதில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது, சாலை போக்குவரத்து மேம்பாடு, பெண்களுக்கு எதிரானகுற்றங்கள், இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபானங்கள் கொள்முதல் அளவை கண்காணிப்பது, மதுவிலக்குசட்டத்தை தீவிரமாக செயல்படுத்தி கள்ளச்சாராயத்தை ஓழிப்பது, போலி மதுவை முற்றிலுமாக ஒழிப்பது ஆகியவைபற்றி விவாதிக்கப்படும்.

இதையடுத்து, மாலையில் நடக்கும் போலீஸ் அதிகாரிகள் மாநாட்டில், போலீஸ் துறையை நவீனப்படுத்துவது பற்றிவிவாதிக்கப்படும்.

2வது நாளான வியாழக்கிழமை, மாவட்ட ஆட்சி தலைவர்கள் பங்கு பெறும் மாநாடு நடைபெற உள்ளது.

இதில், குடிநீர் விநியோகம், நுகர் பொருள் விநியோகம், நகர்புறம், கிராமப்புறம் மற்றும் சுய உதவிக் குழுக்களின்மகளிருக்கான சேமிப்புடன் கூடிய சிறு திட்டத்திற்கு முன்னுரிமை அளிப்பது, கருவிலேயே குழந்தையினஉடல்நிலையை கண்டறியும் மையங்களை பதிவு செய்வது மற்றும் முறைப்படுத்துவது, பெண்சிசுக் கொலையைதடுப்பது, சிறு சேமிப்பு,சத்துணவுத் திட்ட செயலாக்கம், தரிசு நில மேம்பாட்டுத்திட்டம், கொத்தடிமை மறுவாழ்வு,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கிராமங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பது, சிறப்பு கால்நடைபாதுகாப்புத் திட்டம், அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது, நெடுஞ்சாலைகள், பாலங்கள், நிலஆவணங்ளை கம்ப்யூட்டர் மயமாக்குதல், குடும்பத்துக்கு ஒரு வீடு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+