மீண்டும் வந்தார் சுவாமி...
இலங்கை அணி
228 ரன்கள் எடுத்தால் வெற்றி பெற்ற இலக்கை நோக்கி களம் இறங்கியது இலங்கை அணி.
முதலில் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர் ஜெயசூர்யாவும், கலுவித்தரனாவும்.
ஜெயசூர்யாவுடன் ஆட வந்தார் அட்டபட்டு. இவரும் அதிக நேரம் நீடிக்கவில்லை. இவர்ஜாகீர் கான் வீசிய பந்தில் சமீர் தீகேயிடம் காட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போதுஇலங்கையின் ஸ்கோர் 7 தான்.
இதை அடுத்து களமிறங்கினார் ஜெயவர்தனே. இலங்கையில் மிகச் சிறப்பாக அடித்துஆடக்கூடிய அணித்தலைவர் ஜெயசூர்யா எதிர்பாராத விதமாக அவுட் ஆனார்.
நெஹ்ரா வீசிய பந்தில் இவர் ராகுல் திராவிட்டிடம் காட்ச் கொடுத்து அவுட் ஆனார்.திராவிட் கடினமான காட்சை சிறப்பாக பிடித்து ஜெயசூர்யாவை அவுட் ஆக்கினார்.அப்போது அணியின் ஸ்கோர் 24 மட்டும்தான்.
ஜெயசூர்யா அவுட் ஆனது இந்தியாவிற்கு நம்பிக்கை தந்தது. இலங்கை அணி வீரர்கள்யாரும் சிறப்பாக ஆடவில்லை.. ஒருவர் பின் ஒருவராக தொடர்ந்து ஆட்டமிழந்தனர்.
பேட்டிங்கில் சோபிக்காத கங்குலி சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இலங்கை 45.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்கள் எடுத்தது.இதன் மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
இந்திய தரப்பில் ஜாகீர் கான் 8 ஓவர்கள் வீசி 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைகைப்பற்றினர்.
நெஹ்ரா 8.5 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.ஹர்பஜன் சிங் 10 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை கைப்பற்றினார்.கங்குலி 10 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
வியாழக்கிழமை இந்தியா - நியுசிலாந்திற்கு இடையே அடுத்த போட்டி நடக்கிறது.
இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியமானது. இந்த போட்டியில் வெற்றி பெறும்அணிதான் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். இலங்கை ஏற்கனவே இறுதிப் போட்டிக்குதகுதி பெற்றுவிட்டது.
எனவே, நாளைய போட்டி மிக முக்கியமானது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications