ராஜினாமா முடிவை வாபஸ் பெற்றார் வாஜ்பாய்
டெல்லி:
தனது ராஜினாமா முடிவை வாபஸ் பெறுவதாக லோக்சபாவில் பிரதமர் வாஜ்பாய் அறிவித்தார்.
இதையடுத்து இன்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் அவசரக் கூட்டம் டெல்லியில் நடந்தது. திமுகசார்பில் முரசொலி மாறன், மதிமுக சார்பில் வைகோ, எம்.ஜி.ஆர். அதிமுக சார்பில் திருநாவுக்கரசு உள்படகூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் கூட்டத்தில் கலந்து கொண்டன.
ஆனால், சிவசேனைக் கட்சி இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்தது. இன்று நடந்த கூட்டத்தில் பிரதமர் மீது தேசியஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் முழு நம்பிக்கை தெரிவித்தனர். ஏதோ ஒரு கட்சி (சிவசேனை) குற்றம்சாட்டுகிறது என்பதற்காக பிரதமர் பதவி விலகத் தேவையில்லை.
சிவசேனையின் இந்தக் குற்றச்சாட்டினால், பிரதமரின் மனம் எப்படி புண்பட்டிருக்கும் என்பதை நாங்களும்உணர்ந்துள்ளோம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இந்தத் கூட்டத்தில் கருத்துத் தெரிவித்தன.ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட வாஜ்பாய் அங்கு ஏதும் பேசவில்லை.
கூட்டம் முடிந்தவுடன் நேராக லோக்சபாவுக்கு வந்தார் வாஜ்பாய். உடனே, எதிர்க் கட்சியி எம்.பிக்கள் அனைவரும்பிரதரின் பதவி விலகல் முடிவு குறித்து விளக்கம் கேட்டனர். அப்போது பேசிய சபாநாயகர் பாலயோகி, தனதுகட்சியினரிடம் தான் வாஜ்பாய் அப்படி பேசியுள்ளார். இது குறித்து அவையில் அவர் விளக்கம் தரவேண்டியதில்லை என்றார்.
ஆனால், எதிர்க் கட்சிகள் விடவில்லை. இந்த அவையின் முதல்வர் பிரதமர் தான். எனவே, தனது முடிவு குறித்துஅவர் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என்றனர். இதைத் தொடர்ந்து விளக்கம் தர பிரதமரை அழைத்தார்பாலயோகி
அப்போது வாஜ்பாய் எழுந்து பேசியதாவது:
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் என் மீது முழு நம்பிக்கை தெரிவித்து இன்று தீர்மானம்நிறைவேற்றியுள்ளன. இதனால் எனது பதவி விலகல் முடிவை வாபஸ் பெற்றுக் கொள்கிறேன்.
நாடாளுமன்றத்தின் வெளியே நான் எனது ராஜினாமா முடிவை அறிவித்ததற்காக உங்களிடம் வருத்தம்தெரிவித்துக் கொள்கிறேன். நாடாளுமன்றத்தை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் நான் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை.
இது மழைக் காலம்.. மேகங்கள் கூடுவதும் அப்புறம் கலைந்துவிடும் இயற்கை தானே. அதுபோலத்தான் எனதுமுடிவும் ஆகிவிட்டது. நான் பதவி விலகிவிடுவதில் தீவிரமாகத் தான் இருந்தேன். ஆனால், தேசிய ஜனநாயகக்கூட்டணி இதை அனுமதிக்கவில்லை என்றார் வாஜ்பாய்.
சிவசேனை தலைவர் பல்டி:
வாஜ்பாய் மீது கடும் குற்றம் சாட்டிய சிவசேனை தனது நிலையை மாற்றிக் கொண்டதாகத் தெரிகிறது. இந்தக்கட்சியின் தலைவர் பால் தாக்கரே கூறுகையில், எனது அனுமதியில்லாமல் கட்சியின் எம்.பி. சஞ்சய் நிரூபம் பிரதமர்அலுவலக்ததின் மீது புகார் கூறியுள்ளார். அவரை நான் கண்டித்துள்ளேன் என்றார்.
ஆனால், இன்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டத்தில் சிவசேனை கலந்து கொள்ளவில்லை.
இருந்தாலும் வாஜ்பாய் மீது தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாக தொலைபேசி மூலம் தன்னிடம் பால் தாக்கரேதெரிவித்ததாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரான ஜார்ஜ் பெர்னாண்டஸ்தெரிவித்துள்ளார்.
இன்று நடந்த தேசிய ஜனநாயகக் கூட்டத்தில், சிவசேனை எம்.பி. சஞ்சய் நிரூபம் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பால் தாக்கரேக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி உத்தரவிட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், பால்தாக்கரே சொல்லித் தான் பிரதமர் அலுவலகம் மீது தான் புகார் கூறியதாக சஞ்சய் நிரூபம் ஏற்கனேவேவிளக்கம் தந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications