சன் டி.வி. மீது வழக்குத் தொடரக் கோரும் மனு மீது விசாரணை
சென்னை:
தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்ட போது நடந்த நிகழ்ச்சிகளை சன் டி.வி. எடிட் செய்து தனக்குசாதகமான விதத்தில் ஒளிபரப்பியதால், அந்த டி.வி. மீது வழக்குத் தொடர வேண்டும் என்று கோரி தாக்கல்செய்யப்பட்ட மனு மீது விசாரணை தொடங்கியுள்ளது.
இந்த மனு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சன் டிவியும் பதில்மனு ஒன்றைத் தாக்கல் செய்தது. அதில், தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ளகுற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ள சன் டிவி நிறுவனம், இந்த வழக்கில் தங்களையும் வாதியாக சேர்த்துக் கொள்ளவேண்டும் என்று அந்த மனுவில் கோரியுள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
சன் டிவி நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளாக மக்களின் அனைத்து விருப்பத்தையும் பூர்த்தி செய்யும் விதமாக சிறந்தமுறையில் செயலாற்றி வருகிறது.
ஆனால் தி.மு.க. தலைவர் கருணாநிதி கைது சம்பவ ஒளிபரப்பில் டப்பிங் குரல்களை சேர்த்ததாகவும, கிராபிக்ஸ்தொழில்நுட்பம் மூலமாக தவறான செய்திகளை ஒளிபரப்பியதாகவும் சன் டிவி மீது தவறான குற்றச்சாட்டுசுமத்துப்பட்டு உள்ளது.
இந்த மனு உள்நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது செய்தி சுதந்திரத்துக்கும் பாதிப்புவிளைவிப்பதாகும். சன் டிவி உண்மையாக நடந்ததை நடந்த விதமாக ஒளிபரப்பியது.
பல தொலைக் காட்சி சானல்களும் சன் டிவி ஒளிபரப்பிய காட்சிகளையே ஒளிபரப்பின. பல பத்திரிக்கைகளும்,வார-மாத பத்திரிக்கைகளும் சன் டிவி ஒளிபரப்பிய காட்சிகளையே பிரசுரித்து இருந்தன.
ஆனால் அவற்றின் மீது எல்லாம் குற்றம் சுமத்தாமல் வேண்டும் என்றே சன் டிவி மீது மட்டும் குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. கருணாநிதி கைது செய்யப்பட்டபோது. தமிழகத்தில் எந்த விதமான வன்முறையும்நடக்கவில்லை என்று தமிழக அரசே ஒப்புக் கொண்டுள்ளது.
இந் நியிைல் சன் டிவி வன்முறையைத் தூண்டியது என்று இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது உள்நோக்கம் கொண்டது.எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் சன் டிவி தனது கோரியுள்ளது.
வழக்கு விசாரணையை இந்த மாதம் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியம்உத்தரவிட்டார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications