தமிழகம் முழுவதும் "ஆடிப்பெருக்கு" கொண்டாட்டங்கள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி:

தமிழகத்தில் காவிரி உள்ளிட்ட ஆறுகள் ஓடும் பகுதிகள் அனைத்திலும் ஆடிப்பெருக்கு விழா உற்சாகத்துடன்கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆடி 18-ம் தேதி ஆடிப்பெருக்கு விழா விசேசமாகக் கொண்டாடப் படுகிறது.

புதுமணத் தம்பதிகளுக்கு விசேசமான நாள் இது. மேலும் திருமணமாகாகத கன்னிப்பெண்களும், நல்ல கணவன்கிடைக்க இந்நாளில் இறைவனை வேண்டிக்கொள்வார்கள்.

காவிரி மட்டுமல்லாமல், காவிரியின் கிளை நதிகளான பாலாறு, தென்பெண்ணை போன்ற ஆறுகளிலும் பூஜைநடத்தப்பட்டது.

புதுமணத்தம்பதிகள் புத்தாடை அணிந்து கொண்டு காவிரி ஆற்றுக்குச் சென்று ஆற்றில் மஞ்சள் குங்குமம்கருகமணி போன்றவற்றை போட்டு வணங்கினர்.

காவிரி என்றால் பலரின் நினைவுக்கும் பளிச்சென்று வருவது மலைக் கோட்டை மாநகரான திருச்சியில் இருக்கும்காவிரி ஆறும், ரங்கநாதர் பள்ளி கொண்ட கோலத்தில் நீண்ட திருமேனியாய் சயனித்து அருள்பாலித்துவரும்ஸ்ரீரங்கத்தில் இருக்கும் அம்மா மண்டபமும்தான்.

வழக்கும் போல் இந்த ஆடிப் பெருக்கின் போதும் பெருந்திரளான மக்கள் காவிரியின் அய்யாளம்மன்படித்துறையிலும், அம்மா மண்டபம் படித்துறையிலும் காவிரிக்கு பூஜை செய்தனர்.

கடந்த இரு தினங்களாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருவதால் காவிரியிலும் புது நீர் செம்மண்கலந்த செம்மை நிறத்தோடு ஓடிக் கொண்டிருந்தது.

காவிரிக்கு பூஜை முடிந்தபின் மக்கள் கரையோரங்களிலும்,பல இடங்களிலும் அமர்ந்து பாடல்கள்பாடிஆடிப்பெருக்கை மகிழ்ச்சியாக கொண்டாடினர். அதன் பின் தாங்கள் கொண்டு வந்திருந்த உணவுப் பொருட்களைஅங்கேயே அமர்ந்து சாப்பிட்டனர்.

ஆடிப்பெருக்கை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் விசேஷ பூஜையும் நடைபெற்றது.

கரிகாலன் கட்டிவைத்த சுற்றுலா பகுதியான கல்லணைக்கும் ஏராளமக்கள் சென்று ஆடிப பெருக்கைகொண்டாடினர். அதே போல் ஜீயபுரம் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு சுற்றுலா பகுதியான முக்கொம்புபகுதிக்கும் ஏராளமான மக்கள் சென்றனர்.

முக்கொம்பில்தான் காவிரி இரண்டாகப் - அதாவது, வலப்பக்கம் காவிரியாகவும், இடப்பக்கம் கொள்ளிடமாகவும்- பிரிகிறது. இந்த இடத்தில் பெருந்திரளான மக்கள் அதிகாலை முதலே கூடி பூஜை செய்தனர்.

திருச்சி தவிர தஞ்சை, ஈரோடு, சேலம், கரூர் ஆகிய பகுதிகளிலும் பூஜைகள் நடத்தப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+