தமிழக செஸ் வீராங்கனைக்கு "அர்ஜூனா விருது"

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தமிழ செஸ் வீராங்கனை விஜயலட்சுமி உட்பட 16 பேருக்கு மத்திய அரசு "அர்ஜூனா விருது" வழங்குகிறது.

மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது,அர்ஜூனா விருது மற்றும் துரோணாச்சாரியார் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2000-2001ம்ஆண்டிற்கான விருது பெரும் வீரர்கள் பட்டியலை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் உமாபாரதி நேற்று(வியாழக்கிழமை) அறிவித்தார்.

தமிழக செஸ் வீராங்கனையும், இந்தியாவின் முதல் பெண் கிராண்ட் மாஸ்டருமான விஜயலட்சுமி சுப்புராமன்,கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத் உட்பட வெவ்வேறு விளையாட்டுகளில் சாதனை புரிந்த 16 வீரர்களுக்குஅர்ஜூனா விருது வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கான பரிசுத் தொகை ரூ. 1 லட்சம் ஆகும்.

ஆல் இங்கிலாந்து பாட்மின்டன் சாம்பியன் புல்லால கோபிசந்த்துக்கு, நாட்டிலேயே விளையாட்டு வீரர்களுக்குவழங்கப்படும் உயரிய விருதான "ராஜிவ்காந்தி கேல் ரத்னா விருது" வழங்கப்படுகிறது. பரிசுத் தொகை ரூ. 3 லட்சம்ஆகும்.

மேலும், 5 பேருக்கு துரோணாச்சாரியார் விருதும், 14 முன்னாள் வீரர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும்வழங்கப்படுகிறது.

இதற்கான விழா வரும் 29-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கிறது. விருதுகளை ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் வழங்குவார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+