கேலி செய்த வாலிபரை அடித்தே கொன்ற பெண்கள்
சென்னை:
கிரிக்கெட் விளையாடிய பெண்களைக் கிண்டல் செய்த வாலிபரை, அந்தப் பெண்கள் கிரிக்கெட் மட்டையாலேயேஅடித்துக் கொன்றனர்.
அப்போது அந்தப் பகுதியிலுள்ள தியேட்டரில் படம் பார்க்க கண்ணன், ஆறுமுகம், செல்வம் ஆகிய 3 வாலிபர்கள்அந்த வழியாக வந்தார்கள். இவர்கள் ஆயிரம் விளக்குப் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் கிரிக்கெட்விளையாடும் பெண்களைப் பார்த்து கமெண்ட் அடித்துள்ளனர்.
இதைக் கேட்டு அந்த பெண்கள் முதலில் எதையும் கண்டு கொள்ளாமல், அமைதியாக விளையாடிக்கொண்டிருந்தனர். இதன் பின்னர் கிண்டலும் கேலியும் அதிகரிக்க ஆரம்பித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த 3 பெண்கள் உட்பட மொத்தம் 9 பேர் கிரிக்கெட் மட்டையுடன் அந்தவாலிபர்களைத் துரத்த ஆரம்பித்தனர். ஒரு கட்டத்தில் கையில் சிக்கிய அந்த வாலிபர்களை, அந்தப் பெண்கள்மட்டையால் அடித்து நையப்புடைத்தனர்.
அடிதாங்க முடியாமல் சுருண்டு விழுந்த அந்த வாலிபர்கள், பின்னர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப் பட்டனர்.ஆனால் செல்லும் வழியிலேயே ஆறுமுகம் என்ற வாலிபர் வலிதாங்காமல் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேரும்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈவ் டீசிங் காரணமாக, கடந்த வாரம் 5 இளைஞர்களையும், கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகளைக் கேலிசெய்ததற்காக நேற்று (வியாழக்கிழமை) 17 இளைஞர்களையும் சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications