ஜெ. பதிலால் மத்திய அரசு கடும் கோபம்: 356 பயன்படுத்தவும் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

போலீஸ் அதிகாரிகள் 3 பேரை மத்திய அரசுப்பணிக்கு அனுப்பும் விவகாரத்தில் தமிழக அரசின் பதிலைக் கண்டுமத்திய அரசு கடும் கோபம் அடைந்துள்ளது.

இதனால் ஐ.பி.எஸ். அதிகாரிகள் தொடர்பான விதி 6யைப் பயன்படுத்தி அதிகாரிகளை நேரடியாக அழைத்துக்கொள்ளவும் மத்திய அரசு முடிவுசெய்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் 356-வது பிரிவை பயன்படுத்தி ஆட்சியைக்கலைக்கவும் தீவிர யோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தெரிகிறது.

சென்னை மாநர் கமிஷ்னர் முத்துக்கருப்பன் மற்றும் ஜார்ஜ், கிறிஸ்டோபர் நெல்சன் ஆகிய 3 உயர் போலீஸ்அதிகாரிகளையும் மத்திய அரசுப்பணிக்கு அனுப்பி வைக்குமாறு தமிழக அரசுக்கு மத்திய அரசுஉத்தரவிட்டிருந்தது.

இவர்கள் 3 பேரும் கருணாநிதி கைது சம்பவத்தில் அத்து மீறி நடந்து கொண்டதாக திமுகவினர் குற்றம் சாட்டிவந்தனர்.

இதனால் அரசியல் உள்நோக்கத்துடன் இந்த 3 அதிகாரிகளையும் மத்திய அரசு கேட்கிறது என்று ஜெயலலிதாகூறிவந்தார். இந்நிலையில் மத்திய அரசின் உத்தரவுக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தமிழக அரசு பதில் கடிதம்எழுதியது.

அதில் மத்திய அரசு கேட்டுள்ள 3 அதிகாரிகளும் தற்போது மாநில அரசுக்குத் தேவைப்படுகிறார்கள். அவர்கள்தவிர வேறு யாரையாவது குறிப்பிட்டு மத்திய அரசு கேட்டால் அனுப்ப தயார் என்று கூறப்பட்டிருந்தது.

முத்துக்கருப்பணை அழைக்க முடியாது:

மேலும், சென்னை நகர காவல்துறை கமிஷ்னர் முத்துக்கருப்பன் மத்திய அரசுப்பணிக்கு வர விருப்பமில்லை என்றுஏற்கனவே 1998ம் ஆண்டிலேயே எழுதிக் கொடுத்துவிட்ட தகலும் இப்போது வெளியாகியுள்ளது.

இதனால், 5 வருடங்களுக்குப் பிறகுதான் அவரை மத்திய அரசுப் பணிக்கு அழைக்கவே முடியும். வரும் 2002-ல்தான் இந்த 5 வருடங்கள் முடிகின்றன. எனவே அவரை அதற்குள் மத்திய அரசுப் பணிக்கு மாற்ற சட்டத்தில்இடமில்லை.

அடுத்து ஜார்ஜை பொறுத்தவரை கடந்த 9 மாதங்களுக்கு முன்பு தான் வெளிநாட்டுப் படிப்பை முடித்துவிட்டுவந்திருக்கிறார். எனவே அவரையும் 5 வருடங்கள் முடிந்த பின்புதான் அழைக்க முடியும்.

இதே போல கிறிஸ்டோபர் நெல்சனுக்கு இன்னும் ரேங்க் தரப்படவில்லை. அவர் ஒரு கன்பர்ட் ஐ.பி.எஸ்.(ஐ.பி.எஸ். தேர்வு தேறியவர் அல்ல, நியமனம் பெற்றவர்) அதிகாரி. எனவே அவரையும் மத்திய அரசுப்பணிக்குஅழைப்பதில் நியாயமில்லை.

இவ்வாறு சட்டதிட்டங்களை எடுத்துக்காட்டியும், மேலும் மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாகவும் கூறிஅந்த 3 அதிகாரிகளையும் அனுப்ப இயலாது என்று தமிழக அரசு பதில் கடிதம் அனுப்பியுள்ளது.

முதலில் மத்திய அமைச்சர்களை அனுமதியில்லாமல் கைது செய்தது, அடுத்து கருணாநிதி கைதில் அத்து மீறி நடந்துகொண்ட போலீசார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரித்தும் நடவடிக்கை எடுக்காதது,தற்போது போலீஸ் அதிகாரிகளை அனுப்ப மறுத்து வருவது இப்படி மத்திய அரசை தொடர்ந்து ஜெயலிலதாஉதாசீனப்படுத்தி வருவதால் தமிழக அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. மற்றும் பா.ஜ.கவில் உள்ள ஜெயலலிதா ஆதரவாளர்களையும் மீறி தமிழக அரசு மீதுநடவடிக்கை எடுக்க என பிரதமரை மத்திய சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி, தேசிய ஜனநாயகக் கூட்டணியின்ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோர் தொடர்ந்து பிரதமரை நச்சரித்து வருகின்றனர்.

மேலும் அமைச்சரவைக் கூட்டங்களில் மாறனும், பாலுவும் தமிழக அரசின் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கைஎடுக்கவில்லை என்று கூறி வருகின்றனர்.

இதனால் மத்திய அரசு 6வது விதியின் கீழ் தமக்கு வழங்கப்பட்டுள்ள விசேச அதிகாரத்தைப் பயன்படுத்திநேரடியாக அந்த போலீஸ் அதிகாரிகளை எடுத்துக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது.

மேலும், காங்கிரஸ்- இடதுசாரிக் கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி 356யை பயன்படுத்தி தமிழக அரசை டிஸ்மிஸ்செய்யவும் மீண்டும் யோசிக்கத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக சட்ட நிபுணர்களுடன் அருண் ஜேட்லி தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+