மேயரைக் கூப்பிடாமல் நடந்த மதுரை மாநகராட்சி விழா

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையில் மாநகராட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மேயர் அழைக்கப்படவில்லை. இதனால் மதுரை மேயர்குழந்தைவேலு உள்ளிட்ட திமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள மத்திய ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் திருடர்கள் மற்றும் சமூகவிரோதிகளைக் கண்டறிய ரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கான விழா வெள்ளிக்கிழமைநடந்தது.

மாநகராட்சி நடத்திய இந்த விழாவுக்கு மேயர் குழந்தைவேலு அழைக்கப்படவில்லை. அவருக்குப் பதில்மாநகராட்சிக் கமிஷ்னர் லல்லாம் சங்கா கேமராக்களைத் துவக்கி வைத்தார்.

இதையறிந்த திமுகவினர் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்துள்ளனர்.

திமுக தான் மதுரை மாநகராட்சியில் ஆட்சியில் உள்ளது. தமிழகத்தில் அதிமுக ஆட்சி வந்ததில் இருந்து திமுகமேயர்களுக்கு அதிகாரிகள் மரியாதை கொடுப்பது குறைந்துவிட்டது.

சென்னை மேயர் ஸ்டாலின் மாநகராட்சியிலேயே ஒரம் கட்டப்பட்டுவிட்டார். சேலம் திமுக மேயர் சூடாமணிமோசடி போரிங் விவகாரத்தில் சிறைக்குப் போகும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது.

இப்போது மதுரை மேயருக்கே சொல்லாமல் மாநகராட்சி விழா நடந்து முடிந்துவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+