மலேசியாவிலும் பரவி வரும் முஜாகிதீன் தீவிரவாதிகள்
கோலாலம்பூர்:
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய தீவிரவாதிகளான முஜாகிதீன்களின் தொல்லைமலேசியாவையும் எட்டிவிட்டது. இந்தக் கும்பல் தான் இந்தியாவும், ரஷ்யாவிலும் மதத் தீவிரவாதத்தைத்தூண்டிவிட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூரில் கடந்த மே மாதம் ஒரு வங்கியில் கொள்ளையில் ஈடுபட்ட கும்பல் மீது போலீஸ் சுட்டதில் 2 பேர்கொல்லப்பட்டனர். இவர்கள் குறித்து விசாரணை நடத்தியபோது, இவர்கள் இஸ்லாமிய தீவிரவாதிகள் என்றுதெரியவந்தது.
அப்போதுதான் முஜாகிதீன் கும்பல் மலேசியாவிலும் செயல்பட்டு வருவது போலீசாருக்குத் தெரிய வந்தது.இவர்கள் முஜகிதீன் குரூப் ஆப் மலேசியா என்று அழைக்கப்படுகின்றனர்.
இப்போது கைது செய்யப்பட்டுள்ள 8 தீவிரவாதிகளில் மலேசியாவின் மிக முக்கிய எதிர்க்கட்சியான பான்மலேசியன் இஸ்லாமிக் கட்சியின் இளைஞர் பிரிவுத் தலைவர் ஒருவரும் அடங்குவார். இந்தக் கட்சி மலேசியாவில்முஸ்லிம்களுக்கு தனி மாநிலம் கோரி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தீவிரவாத அமைப்பினர் ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியாளர்களால் இராணுவப் பயிற்சிபெற்றவர்கள் என்று கூறப்படுகிறது. "ஜிகாத்" என்றழைக்கப்படும் இஸ்லாமியப் போருக்காகதயார்படுத்தப்பட்டவர்கள்.
அந்த 8 பேரும் உள்துறைப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற விசாரணை ஏதும் இன்றிபோலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக இதே அமைப்பைச் சேர்ந்த 10 பேர் வங்கிக் கொள்ளைதொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோலாலம்பூரில் உள்ள காட்டுப் பகுதியில் இவர்கள் பதுக்கி வைத்திருந்த ஆயுதங்கள் மற்றும்வெடிபொருட்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இந்த அமைப்பைச் சேர்ந்த மேலும் 50 பேர் மலேசியாவில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மலேசிய அரசியல்வாதி ஒருவரைக் கொலை செய்ததில் இந்தஅமைப்பினருக்கும் தொடர்பிருப்பதாகத் தெரிய வந்துள்ளது. கொல்லப்பட்ட அந்த அரசியல்வாதி கிருஸ்தவமதத்தைச் சேர்ந்தவர்.
மேலும், ஒரு கோயில் மற்றும் ஒரு சர்ச்சில் வெடிகுண்டு வைத்ததிலும் இந்த அமைப்பினருக்குப் பங்குண்டு என்றும்கூறப்படுகிறது.
மேலும் மலேசிய மக்கள் தொகையில் ஏறத்தாழ பாதி பேர் முஸ்லீம்களாக இருப்பதால், தீவிரவாதிகளின் இந்தச்செயல்கள் நாட்டின் ஸ்திரத் தன்மையை குலைத்துவிடும் என்று அரசு அஞ்சுகிறது. இதைத்தொடர்ந்து, மலேசியஅரசு முஸ்லீம் தீவிரவாதிகள் நடவடிக்கைகள் பற்றி உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.
இவர்களை அடக்க இந்தியாவின் உதவியையும் மலேசியா கோரும் என்று தெரிகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications