ஜெ. பாணியில் மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதுகிறார் கருணாநிதி
சென்னை:
முத்துக்கருப்பன் உள்ளிட்ட 3 போலீஸ் அதிகாரிகள் விவகாரத்தில் தனக்கு ஆதரவு தெரிவிக்குமாறு முதல்வர்ஜெயலலிதா கடிதம் எழுதியதைப் போல கருணாநிதியும் இதுகுறித்து கடிதம் எழுத உள்ளார்.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் உள்நொக்கம் கொண்டது என்றும், மாநில அரசுகளின் உரிமையைப்பறிப்பதாகவும் இருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இந்தக் கடிதத்திற்கு ஓரளவு பயனும் கிடைத்துள்ளது. ராஜஸ்தான் முதல்வர், மத்திய அரசின் நடவடிக்கைக்குஎதிர்ப்புத் தெரிவித்ததுடன் தமிழ முதல்வர் ஜெயலலிதாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்துமேலும் சில மாநில முதல்வர்களும் கடிதம் எழுத இருப்பதாகத் தெரிகிறது.
இதன் மூலம் ஜெயலலிதா மத்திய அரசை எதிர்த்து தாம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து மாநிலமுதல்வர்களின் ஆதரவையும் மளமளவென்று திரட்டிவருகிறார்.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் தனது தரப்பில் உள்ள நியாயங்களையும், கைது செய்யப்பட்டபோது போலீசார் தன்னை நடத்திய விதம் குறித்தும் அனைத்து முதல்வர்களுக்கும் கடிதம் எழுத இருக்கிறார்.
தானும் மத்திய அமைச்சர்கள் மாறன் மற்றும் பாலு ஆகியோர் கைது செய்யப்பட்ட போது டி.விக்கள் மற்றும்செய்தித் தாள்களில் வெளிவந்த செய்தித் தொகுப்புகள் அடங்கிய "த மிட் நைட் அரஸ்ட்" என்ற புத்தகத்தையும்அனுப்ப முடிவு செய்துள்ளார்.
இது குறித்து நேற்று சென்னையில் மருத்துவ மணையில் உள்ள கருணாநிதியைப் பார்க்க வந்த மத்திய அமைச்சர்வெங்கையா நாயுடு கூறியதாவது:
கைது செய்யப்பட்ட போது போலீசார் கருணாநிதி கையைப் பிடித்து தாறுமாறாக இழுத்ததால், ரத்தக்கட்டுஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மத்திய அரசின் நடவடிக்கை பற்றி மற்ற மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுத ஜெயலலிதாவுக்கு எந்த அளவுக்குஉரிமை உள்ளதோ அந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட கருணாநிதிக்கும் உரிமை உள்ளது என்றார்.
மத்திய அரசுக்கும் தமிழக அரசுக்கும் மோதல் அதிகரித்து வரும் நிலையில் மற்ற மாநில முதல்வர்களும் இந்தப்பிரச்சனைக்குள் இழுக்கப் படுகிறார்கள்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications