நாளை டெல்லி செல்கிறார் ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திட்டக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக, தமிழக முதல்வர் ஜெயலலிதா நாளை (செவ்வாய்க்கிழமை)டெல்லி செல்கிறார்.

மத்தியத் திட்டக் குழு கூட்டத்தின்போது, அக்குழுவின் துணைத் தலைவரான கே.சி. பந்த்தைச் சந்தித்து,தமிழ்நாட்டுக்கான திட்ட ஒதுக்கீடு குறித்து பேசவிருக்கிறார் ஜெயலலிதா.

மேலும், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, சட்ட அமைச்சர் அருண் ஜேட்லி, காங்கிரஸ் தலைவர்சோனியா காந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச் செயலாளர் ஹர்கிஷன்சிங் சுர்ஜீத், வலது கம்யூனிஸ்டுபொதுச் செயலாளர் பரதன் ஆகியோரையும் ஜெயலலிதா சந்திக்கவிருக்கிறார்.

தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அமைச்சகப் பணிக்காக, மத்திய அரசு அழைத்திருந்தது. ஆனால்,யாரையும் அனுப்புவதற்குத் தயாராக இல்லை என்று தமிழக அரசும் மத்திய அரசுக்குப் பதில் கடிதம்அனுப்பிவிட்டது.

இதுகுறித்து, தனக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று, மற்ற மாநில முதல்வர்களுக்கும் ஜெயலலிதா கடிதம்அனுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருக்கும் ராஜஸ்தான் மாநில முதல்வர், ஜெயலலிதாவுக்கு ஆதரவாகமத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், ஜெயலலிதா டெல்லி செல்லவிருப்பது பெரும் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக்கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+