முரளி மனோகர் ஜோஷி குணமடைந்தார் .. மாலை டெல்லி பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

காஞ்சிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ரசாயன கலவை இருந்த நீரைக் குடித்து மயக்கமடைந்த மத்திய மனித வளத்துறை அமைச்சர்முரளி மனோகர் ஜோஷி குணமடைந்துவிட்டார். திங்கள்கிழமை மாலை அவர் டெல்லி செல்கிறார்.

காஞ்சிபுரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட முரளி மனோகர் ஜோஷி, குடிநீர் என்று நினைத்துரசாயன கலவை இருந்த நீரைக் குடித்து விட்டார். இதனால் அவர் வாந்தி எடுத்து மயக்கமடைந்தார்.

உடனடியாக அவரை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர்.

தற்போது அமைச்சர் குணமடைந்து விட்டதாக மருத்துவமனைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்திங்கள்கிழமை மாலை அவர் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

அமைச்சர் ஜோஷியை, திங்கள்கிழமை காலை முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் போன் மூலமும் மத்திய அமைச்சரிடம் நலம் விசாரித்தார்.

பின்னர் அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனாரையும் ஜெயலலிதா சந்தித்துநலம் விசாரித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+