ஊரை ஏமாற்றுகிறார் ஜெ.- குற்றம் சாட்டுகிறார் கருணாநிதி
சென்னை:
டி.ஜி.பி. ராஜகோபாலனை மத்திய அரசுப் பணிக்கு அனுப்பாமல் ஏதேதோ காரணம் சொல்லி முதல்வர் ஜெயலலிதாஊரை ஏமாற்றுவதாக முன்னாள் முதல்வர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயக்குநராக இருப்பவர் டி.ஜி.பி. ராஜகோபாலன். இவர் கடந்த திமுக ஆட்சியில்முக்கியமான பதவி வகித்து வந்தார்.
தந்போயை அதிமுக அரசு பொறுப்பேற்றவுடன் திமுக ஆட்சியில் முக்கியப் பதவிகளை வகித்து வந்த பல உயர்அதிகாரிகளை மாற்றிவிட்டு புதிதாக வேறு அதிகாரிகளை நியமித்தது.
ராஜகோபாலனும் அவ்வாறு மாற்றப்பட்டு டம்மி பதவியான போலீஸ் பயிற்சி கல்லூரியின் இயக்குனராகநியமிக்கப்பட்டார்.
இந் நிலையில், மத்திய அரசின் கருப்புப் பூனைப்படையின் இயக்குனராக ராஜகோபாலனை மத்திய அரசுநியமித்தது. இதனால் அவரை உடனடியாக விடுவித்து மத்திய அரசுப் பணிக்கு அனுப்புமாறு தமிழக அரசுக்குமத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
ஆனால், அதை தமிழக அரசு மறுத்து வருகிறது. இது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பிய பதில்கடிதத்தில் ராஜகோபாலனின் சேவை... தமிழக அரசுக்குத் தேவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து நேற்று திமுக தலைவர் கருணாநிதி நிருபர்களுக்குப் பேட்டியளித்தார். முன்னதாக அவர் தான் கைதுசெய்யப்பட்டபோது, போலீசார் பிடித்து இழுத்ததால் கையில் ஏற்பட்ட ரத்தக்கட்டிற்கான 4 நாள் சிகிச்சை முடிந்துமருத்துவமணையில் இருந்து வந்தார்.
அண்ணா அறிவாலயத்தில் நிருபர்களிடம் கூறியதாவது,
டி.ஜி.பி. ராஜகோபாலன் விவகாரம் பற்றிப் பலமுறை நான் கூறிவிட்டேன். மத்திய அரசு கேட்டால் அதிகாரிகளைஉடனே அனுப்பி வைப்பது தான் முறை. தமிழக அரசு கேட்டவுடன், விஜயகுமார், சங்கர் உள்பட பலரை மத்தியஅரசு அனுப்பி வைக்கவில்லையா?.
அது மாதிரி ராஜகோபாலன், முத்துக்கருப்பன் உள்ளிட்ட 4 பேரையும் தமிழக அரசு அனுப்பி வைக்க வேண்டும்.பயிற்சிக் கல்லூரி இயக்குனர் பதவி அவ்வளவு முக்ககியமான பதவியல்ல. ராஜகோபாலன் விவகாரத்தில்ஜெயலலிதா அரசு ஊரை ஏமாற்றப்பார்க்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீஸ் பயிற்சிக் கல்லூரி இயக்குனர் பதவி முக்கியமான பதவி இல்லை என்று கருணாநிதி கூறியிருப்பது, பெரியபிரச்சனையைக்ை கிளப்பும் என்று தெரிகிறது. இந்தப் பதவி முக்கியமான பதவி இல்லை என்றால் மாநில போலீஸ்டி.ஜி.பியாக இருந்த தேவாரத்தை இந்தப் பதவிக்கு திமுக அரசு ஏன் மாற்றியது என்று அவர்கள் கேள்விஎழுப்புவார்கள்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications