மேம்பால ஊழல்: சி.பி.சி.ஐ.டி மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:
மேம்பால ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்ப்பட்டிருந்த சென்னை நகர மேயர் மு.க.ஸ்டாலின்உள்ளிட்ட 7 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்ட போது, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிஅசோக்குமார் கூறிய கருத்துக்களை நீக்க வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்திருந்த மனு மீதான தீர்ப்பைசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஒத்தி வைத்தார்.
சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ஊழல் செய்ததாக சென்னை நகர மேயர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பலர்கைது செய்யப்பட்டனர்.
ஸ்டாலினையும் மேலும் 7 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்த சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதிஅசோக்குமார், ஊழல் வழக்கில் ஸ்டாலின் உள்ளிட்ட பலர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட விதம் உள்ளிட்டபல விஷயங்களில் சி.பி.சி.ஐ.டி. நடந்து கொண்ட விதத்தைக் கண்டித்திருந்தார்.
இந்த கருத்துக்களை நீக்க வேண்டும் என்று கோரி சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்,
இந்த மனுவுக்கு நீதிபதி அசோக்குமார் விரிவான பதிலை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் மீண்டும் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது இந்த மனு. இரு தரப்பு வாதங்களையும் கேட்டசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி மலை சுப்ரமணியன் இந்த மனு மீதான தீர்ப்பை ஒத்தி வைப்பதாக கூறினார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications