கேட்டதை விட தமிழகத்துக்கு ரூ.40 கோடி அதிக நிதி ஒதுக்கீடு
டெல்லி:
2001-2002 ஆம் நிதி ஆண்டிற்கான திட்டச் செலவுக்கு தமிழக அரசு கேட்டதைவிட அதிகமாக மத்திய அரசு நிதிஒதுக்கீடு (ரூ.6,040 கோடி) செய்துள்ளது.
அப்போது, தமிழக அரசின் திட்டச் செலவுக்கு ரூ. 6,000 கோடி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக்கொண்டார்கள். ஆனால், அவர்கள் கேட்ட தொகையைவிட ரூ.40 கோடி அதிகமாக, அதாவது ரூ.6,040 கோடியைமத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
முன்னதாக, டெல்லி சென்று பிரதமர் வாஜ்பாய், திட்டக் கமிஷன் துணைத் தலைவர் கே.சி. பந்த் மற்றும் பல மத்தியஅமைச்சர்களையும் சந்திக்க முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அவருக்கு முதுகுவலி திடீரென்று அதிகரித்து விட்டதால் மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுரைகூறினார்களாம். அதனால், கடைசி நேரத்தில் முதல்வரின் டெல்லி பயணம் ரத்தானது என்று முதல்வர் அலுவலகம்தெரிவித்தது.
இதைத் தொடர்ந்து, தமிழக நிதி அமைச்சர் பொன்னையன், தலைமைச் செயலாளர் சங்கள் உட்பட பல அதிகாரிகள்டெல்லி சென்றனர். பிறகு, மத்திய திட்டக்கமிஷன் துணைத்தலைவர் கே.சி.பந்த்தைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
அதன் முடிவில் தமிழ்நாட்டுக்கு ரூ.6,040 கோடியை 2001- 2002 ம் ஆண்டிற்கான திட்டச் செலவுக்காகஅளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில், சுகாதாரம் மற்றும் கல்வித்துறை வளர்ச்சி கண்டிருப்பதை பந்த் பாராட்டினார்.
கல்வி அறிவில், 1991 -ல் 63.7 சதவீதம் இருந்தது. இப்போது, 2001 -ல் 73.47 சதவீதமாக உயர்ந்துள்ளது.நிலவளத்தைப் பெருக்குவதிலும், தமிழகம் இந்தியாவிலேயே 2 -வது இடத்தில் உள்ளது. மேலும் ஆரம்பக் கல்வி,மென் பொருள் ஏற்றுமதி போன்றவற்றில் தமிழகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பாராட்டுதலுக்குரியது என்றும்கே.சி.பந்த் கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications