கொப்பரை தேங்காய் ஊழல்: அ.தி.மு.க. விவசாயிகள் பிரிவு கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கடந்த தி.மு.க. ஆட்சியின் போது கொப்பரை தேங்காய் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறுஅ.தி.மு.க. ஆதரவு விவசாயிகள் பிரிவு தமிழக அரசை கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த தி.மு.க. ஆட்சியில் கொப்பரை தேங்காய் கொள் முதலில் ரூ 1.50 பில்லியனுக்கும் அதிகமாக ஊழல்நடந்துள்ளது. இதில் சம்பந்ததப்பட்டவர்கள் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅ.தி.மு.க. ஆதரவு விவசாயிகள் பிரிவினர் வியாழக்கிழமை நடத்திய கூட்டத்தில் தீர்மானம் இயற்றப்பட்டது.

மேலும், கொப்பரைத் தேங்காயை அரசே நேரடியாக கொள்முதல் செய்யும் என அறிவித்ததற்காகவும், நீலகிரியில்பாதிக்கப்பட்ட தேயிலைத் தொழிலாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க உத்தரவிட்டதற்காகவும், ரூ 3.11பில்லியன் அளவிற்கான விவசாயிகளின் கடனை ரத்து செய்ததற்காகவும் முத்லவருக்கு நன்றி தெரிவித்துதீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது தவிர மேம்பால ஊழல் வழக்கில் தி.மு.க.தலைவர் கருணாநிதி கைது செய்யப்பட்டபோது மத்திய அமைச்சர்கள்முரசொலி மாறன் மற்றும் டி.ஆர் பாலு ஆகியோர் முறைகேடாக நடந்து கொண்டதற்கு அவர்கள் மீது மத்திய அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தரிசாக இருக்கும் 2 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை 5 ஆண்டுகளில் மேம்படுத்துவதாக முதல்வர் கூறிஇருப்பதற்கும் இந்த கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+