பேரணியில் நடந்தே வர திமுக வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் 12ம் தேதி திமுக சார்பில் நடைபெறவுள்ள கண்டனப் பேரணியில் அனைவரும் நடந்தே கலந்துகொள்ள வேண்டும். யாரும் வாகனத்தில் வர அனுமதியில்லை என்று திமுக தலைமை கூறியுள்ளது.

இது தொடர்பாக திமுக கண்டனப் பேரணிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், கண்டனப் பேரணியில் கலந்துகாள்ளும் அனைத்துத் தொண்டர்களும் நடந்தே கலந்து கொள்ள வேண்டும். யாரும் வாகனத்தில் வரக் கூடாது.

தங்களது வாகனங்களை கிண்டி ஸ்பிக் நிறுவனம் அருகே நிறுத்தி இறங்கிக் கொள்ள வேண்டும். வாகனங்களைபொதுக்கூட்டம் நடைபெறவுள்ள கடற்கரை சீரணி அரங்கம் அருகே மற்றும் சுற்றுப் பகுதியில் கொண்டு போய்நிறுத்த வேண்டும்.

பேரணி துவக்கம் முதல் முடிவு வரை நடைப் பயணமாகவே இருக்கும். வாகனங்கள் எக்காரணம் கொண்டும்அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை திமுகவினர் மறந்து விடக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.

கண்டனப் பேரணி, சைதாப்பேட்டை மறைமலையடிகள் பாலத்திலிருந்து துவங்குகிறது. அங்கிருந்து நந்தனம்அண்ணாசாலை, சேமியர்ஸ் சாலை, டிடிகே சாலை, ராதாகிருஷ்ணன் சாலை, காமராஜர் சாலை வழியாக மெரினாகடற்கரை சீரணி அரங்கத்தை அடையும்.

அங்கு கண்டனப் பொதுக்கூட்டம் நடக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட திமுக தலைவர்கள் அதில்கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+