காஞ்சிபுரம் அருகே பஸ் கவிழ்ந்து ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே அரசு பஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை தலைகீழாகக் கவிழ்ந்ததில் ஒரு பயணிபலியானார். 20 பேர் காயமடைந்தனர்.
காஞ்சிபுரத்தை அடுத்த ஊவேரி சத்திரம் அருகே வந்து கொண்டிருந்தபோது, அந்த பஸ் திடீரென்று தலைகீழாகக்கவிழ்ந்தது.
இந்த விபத்தில் அந்த பஸ்ஸில் பயணம் செய்த ஒருவர் அந்த இடத்திலேயே பலியானார். மேலும், 20 பயணிகள்காயமடைந்தனர்.
காயமடைந்தவர்கள் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார்விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications