போலீசுக்கு வைகோ கண்டனம், திமுகவுக்கு வாழப்பாடி கண்டனம்
சென்னை:
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தி.மு.க. நடத்திய கண்டன பேரணியில் தி.மு.க.தொண்டர்கள் போலீசாரால் தாக்கப்பட்டதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும்கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அப்போது போலீசார் தடியடி நடத்தினர். கண்ணீர்புகை குண்டுவீசி துப்பாக்கிச் சூடும்நடத்தப்பட்டது. இதில் 5 தி.மு.க. தொண்டர்கள் கொல்லப்பட்டனர். 67 பேர்காயமடைந்தனர்.
இந்த சம்பவத்திற்கு பல அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
வைகோ கண்டனம்:
போலீசார் தி.மு.க. தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இந்தசம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை செய்யஉத்தரவிடப்பட வேண்டும்.
துப்பாக்கி சூட்டில் இறந்த தி.மு.க.தொண்டர்களின் குடும்பத்திற்கு என் ஆழ்ந்த இரங்கைதெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கண்டனம்:
தி.மு.க. நடத்திய கண்டன பேரணியில் பங்கேற்ற தி.மு.க. தொண்டர்கள் மீது போலீசார்தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது.
இந்த சம்பவத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளது. இது குறித்து உயர் நீதிமன்ற நீதிபதிதலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று புதிய தமிழகம்கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
வாழப்பாடி ராமமூர்த்தி கருத்து:
தி.மு.க நடத்திய கண்டன பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் தான் போலீசார் அதைதடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
தி.மு.கவினர் வேண்டுமென்றே, திட்டமிட்டு வன்முறையில் ஈடுபட்டனர். தமிழகத்தில்நடைபெறும் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தி.மு.கவினர்நடத்திய செய்கை இது என்று தமிழக ராஜீவ் காங்கிரஸ் கட்சி தலைவர் வாழப்பாடிராமமூர்த்தி கருத்து தெரிவித்துள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications